இங்கிலாந்து நாட்டில் வேல்ஸில், உள்ள Swansea-ஐ உலுக்கியிருக்கும் ஒரு சோகச் சம்பவம்…
சகோதரியின் மகள்களைக் காப்பாற்றுவதற்காக, பயங்கர வேகத்துடன் சீறிப் பாய்ந்த நீர்வீழ்ச்சிக்குள் குதித்து தன் உயிரையே தியாகம் செய்துள்ளார் 27 வயது நிரம்பிய ஈழத்து இளைஞன் மோகனநீதன் முருகானந்தராஜா!
Brecon Beacons என்ற இடத்தில் உள்ள நீர்வீழ்ச்சிக்கு நண்பர்களுடனும் உறவுகளுடனும் சென்ற மோகனநீதன் குடும்பத்தினர், அங்கு உற்சாகமாகக் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென மோகனநீதனின் சகோதரியின் மகள்கள் இருவரும் எதிர்பாராதவிதமாக நீர்ச்சுழலில் சிக்கி, அலறித் துடித்துள்ளனர்.
அவர்களைக் காப்பாற்ற, ஒரு நொடிகூட யோசிக்காமல் நீர்வீழ்ச்சிக்குள் பாய்ந்த மோகனநீதன், அவர்களை பத்திரமாகக் கரைசேர்த்தார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக, காப்பாற்ற வந்த மோகனநீதன் நீர்ச்சுழலில் சிக்கிக் கொண்டார்.
பல மணி நேரம் நடந்த தேடுதல் வேட்டைக்குப் பிறகு, மறுநாள் அவரது உடல் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
உறவுகளின் உயிரைக் காப்பதற்காக தன் உயிரையே இழந்த அந்த வீரனின் தியாகம், ஒட்டுமொத்தப் பகுதியையும் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது. இந்தச் சோகச் சம்பவம், Swansea பகுதியில் வாழும் தமிழர்கள் மத்தியில் ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.