பிரேசிலின் முன்னாள் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ மீதான ஆட்சி கவிழ்ப்பு முயற்சி குறித்த வழக்கில் விரைவில் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தீர்ப்பு பிரேசில் அரசியலில் மட்டுமின்றி, அவரது சர்வதேச கூட்டாளியான அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என கூறப்படுகிறது.
வழக்கு என்ன?
2022ஆம் ஆண்டு பிரேசில் அதிபர் தேர்தலில் போல்சனாரோ தோல்வியடைந்த பிறகு, முடிவுகளை மாற்றியமைக்க அவர் சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த 2023 ஜனவரி 8 அன்று அவரது ஆதரவாளர்கள் பிரேசில் தலைநகரான பிரேசிலியாவில் உள்ள அரசு கட்டிடங்களைத் தாக்கி வன்முறையில் ஈடுபட்டனர். இதன் மூலம் ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுக்களை போல்சனாரோ தொடர்ந்து மறுத்து வருகிறார்.
போல்சனானோவுக்கான தண்டனை
இந்த வழக்கில் போல்சனானோ குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். அதேபோல், இந்தத் தீர்ப்பு பிரேசில் அரசியலில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாகக் கருதப்படுகிறது. ஏனெனில், முதன்முறையாக ஒரு முன்னாள் ராணுவத் தலைவரும் அதிபரும் ஆட்சி கவிழ்ப்பு முயற்சி குற்றத்திற்காக நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகின்றனர்.
டிரம்ப் மற்றும் பிரேசிலில் என்ன எதிர்பார்க்கலாம்?
- அமெரிக்காவின் நிலைப்பாடு: டிரம்ப், போல்சனாரோவை தனது கூட்டாளியாகக் கருதுகிறார். பிரேசில் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை ஒரு “சூனிய வேட்டை” (witch hunt) என டிரம்ப் கூறியுள்ளதுடன், பிரேசில் மீது வர்த்தக வரிகளை உயர்த்துவதன் மூலம் அழுத்தம் கொடுக்க முயற்சி செய்கிறார்.
- பிரேசிலில் அரசியல் பதற்றம்: போல்சனாரோவுக்கு எதிராகத் தீர்ப்பு வரும் பட்சத்தில், நாடு முழுவதும் அவரது ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபடலாம் என அஞ்சப்படுகிறது. போல்சனாரோ, ஏற்கனவே 2030 வரை தேர்தலில் போட்டியிட தடை செய்யப்பட்டுள்ளார்.
- அரசியல் வாரிசு: இந்தத் தீர்ப்பிற்குப் பிறகு, போல்சனாரோ தனது அரசியல் வாரிசைத் தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகலாம்.
இந்த வழக்கு ஒருபுறம் பிரேசிலின் ஜனநாயக முதிர்ச்சியை சோதிக்கும் ஒரு தருணமாகவும், மறுபுறம் அரசியல் உள்நோக்கம் கொண்ட விசாரணை என்றும் பார்க்கப்படுகிறது.