வெனிசுலா அதிபரை வேட்டையாட டிரம்ப் புதிய திட்டம்: அதிரடியாகப் போர் விமானங்கள் குவிப்பு!

வெனிசுலா அதிபரை வேட்டையாட டிரம்ப் புதிய திட்டம்: அதிரடியாகப் போர் விமானங்கள் குவிப்பு!

வெனிசுலாவில் ஆட்சி மாற்றம் குறித்த எந்த ஒரு திட்டமும் இல்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். ஆனால், மறுபுறம் அமெரிக்க இராணுவமோ கரீபியன் கடற்பகுதியில் ரகசியமாக போர் விமானங்களைக் குவித்து வருவது உலக அரங்கில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெனிசுலாவில் இருந்து போதைப்பொருள் கடத்தல் அதிகரித்து வருவதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா கூறுகிறது. ஆனால், அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவை ஆட்சியிலிருந்து நீக்குவதற்கான மறைமுக முயற்சி என வெனிசுலா குற்றம்சாட்டியுள்ளது. மேலும், வெனிசுலாவில் உள்ள ஒரு கப்பல் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல் நடத்தியதில் 11 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதல் தொடர்பாக டிரம்ப், இதுபோன்று மீண்டும் நடந்தால், கடும் பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

அமெரிக்கா தொடர்ந்து இராணுவ பலத்தைக் காட்டி அச்சுறுத்தி வருவதாக வெனிசுலா குற்றம்சாட்டி வருகிறது. இது வெனிசுலா மற்றும் அமெரிக்கா இடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. டிரம்ப் ஆட்சி மாற்றம் குறித்து மறுத்தாலும், அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகள் வெனிசுலாவில் போருக்கான சூழலை ஏற்படுத்துவதாகவே பல உலக அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.