வீடியோ கீழே இணைப்பு
ஆச்சரியம் ஆனால் உண்மை ! பிரான்சில் இருந்து படகு மூலமாக லண்டன் வந்த அகதி ஒருவர்: அவரை அதிகாரிகள் ஹாட்டலில் தங்க வைத்துள்ளார்கள். சைக்கிள் ஒன்றை வாங்கி அவர் அருகே உள்ள சாலைகளில் செல்வதும். பெண்களின் முதுகை கைகளால் தட்டுவதும், இடுப்பை தட்டி விட்டுச் செல்வதுமாக இருந்துள்ளார். இதனால் பல பெண்கள் முறைப்பாடு செய்ய, அவரை மிகவும் சிரமத்திற்கு மத்தியில் பொலிசார் கைது செய்து நீதிமன்றில் நிறுத்தினால். அவரை நீதிபதி விடுதலை செய்து விட்டார் ! என்னடா இப்படி ஒரு காரணமா என்று எண்ணத் தொன்றும் அளவுக்கு இவர் ஒரு காரணத்தை நீதிமன்றில் சொல்லி தப்பியுள்ளார்.
ஆங்கிலேயர்களுக்கு பொதுவாக மிகவும் இரக்க குணம் உண்டு. இல்லையென்றால் தமது நாட்டில் இப்படி மில்லியன் கணக்கான வேற்றின மக்கள் வந்து குடியேற அனுமதித்திருக்க மாட்டார்கள். இந்தியா போன்ற நாடுகளில் ஒரு வெளிநாட்டவர் இப்படி நடந்திருந்தால், ரவுண்டு கட்டி அடித்திருப்பார்கள். தர்மடி என்பார்களே அது தான் நடந்திருக்கும். ஆனால் லண்டனில் நிலை வேறு விதமாக இருக்கிறது என்பது தான் உண்மை.
அதாவது மக்கள் வேலை செய்து அரசாங்கத்திற்கு பெரும் தொகைப் பணத்தை வரியாக கட்டுகிறார்கள். உதாரணமாக 100 பவுண்டுகளை உழைத்தால் அதில் 20 பவுண்டுகள் வரியாக போய் விடும். இந்த வரிப்பணத்தை நம்பியே பிரிட்டன் அரசு இயங்கி வருகிறது. இந்த நிலையில் பிரிட்டனுக்கு வரும் அகதிகளை ஹோட்டலில் தங்க வைக்க, இந்த வரிப்பணத்தில் இருந்து தான் செலவு செய்யப்படுகிறது. இதனை சற்றுக் கூட உணராத இந்த நபர், வேலைக்கு செல்லும் பெண்களுக்கு செக்ஸ் டாச்சர் கொடுத்துள்ளார்.
இதில் அவர் கைதாகி நீதிமன்றம் சென்றவேளை, அவருக்காக வாதாட ஒரு வக்கீல் வழங்கப்பட்டுள்ளது. அதற்கான பணத்தையும் அரசு தான் கொடுத்துள்ளது. அதுவும் மக்கள் வரிப்பணத்தில் இருந்து தான். அந்த திறமையான வக்கீல் என்ன சொல்லி இருக்கிறார் என்றால், தனது கட்சிக் காரருக்கு லண்டன் நடைமுறைகள் தெரியாது என்றும். அவர் லண்டன் சட்ட திட்டங்களை அறிந்திருக்கவில்லை என்றும். தனது கட்சிக்காரர் வாழ்ந்த நாட்டில் இப்படி பெண்களை பின்னால் தட்டுவது குற்றம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில் செக்ஸ் டாச்சர் கொடுத்த குறித்த அகதியை நீதிமன்றம் எச்சரித்து விடுதலை செய்துள்ளது. இதுவே அவருக்கு விசா கிடைத்தால் நாளை என்ன எல்லாம் நடக்குமோ தெரியாது… அடே யாருமே இல்லாத கடையில் யாருக்காக டீ போடுகிறாய் … உன் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா ? என்று விவேக் கேட்டது போல , அட உங்க நல்ல மனசுக்கு அளவே இல்லையாடா ? என்று தான் கேட்கத் தோன்றுகிறது.