Posted in

அதிமுகவின் ஒவ்வொரு செங்கல்லையும் உருவும் செங்கோட்டையன் பதறும் எடப்பாடி

ஏனடா இந்த ஆளை வெளியேற்றினோம் என்று எடப்பாடி தலையில் துண்டு போட்டுக் கொள்ளவேண்டிய சூழ் நிலை உருவாகியுள்ளதோ தெரியவில்லை. காரணம் 27ம் திகதி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன் 500 அதிமுக தொண்டர்களையும் விஜய் கட்சியில் இணைத்ததோடு, முன் நாள் MP சத்தியபாமாவையும் அதிமுகவில் இருந்து விஜய் கட்சியில் இணைத்தார். தற்போது 28ம் திகதி (இன்று) அவர் மேலும் 2 மாஜி மந்திரிகளோடு பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக கோட்டையில் உள்ள செங்கல் ஒவ்வொன்றையும் செங்கோட்டையன் உருவ ஆரம்பித்துள்ளார் என்பது நன்றாகப் புரிகிறது. 

இதனால் அதிமுக வட்டாரம் பெரும் பரபரப்பில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகாவின் முன் நாள் 2 முக்கிய மந்திரிகளை, தற்போது விஜயின் கட்சியில் இணைக்க செங்கோட்டையன் இறங்கியுள்ளார். இதேவேளை முக்கிய அதிமுக பிரமுகர்களை TVKல் இணைக்க , செங்கோட்டையனுக்கு ஒரு அசைன்மென்ட் கொடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் யார் எப்போது எங்கே தாவுவார்கள் என்று தெரியாத நிலையில் எடப்பாடி இருக்கிறார்.

உண்மையில் சொல்லப் போனால், எடப்பாடி , ஸ்டாலின் , சீமான் மற்றும் அன்புமணி போன்ற தலைவர்கள் அனைவரையும் விட விஜய் மிகவும் புத்திசாலி என்று தான் கூறவேண்டும். தமிழக மக்கள் ஏற்கனவே அதிமுக பிரிவுகளாக இருப்பதை நினைத்து, வெறுப்பில் இருக்கிறார்கள். இந்த வெறுப்பை மேலும் விரிவு படுத்தியுள்ள விஜய் அவர்கள், அந்தக் கட்சியில் உள்ள முக்கியஸ்தர்களை TVKல் இணைத்து வருகிறார். இதனால் TVKஇன் பலம் மேலும் அதிகரித்துள்ள நிலையில்.

அதிமுகவுக்கு இருக்கும் வாக்கு வங்கியில் ஒரு கணிசமான அளவை விஜய் கட்சியான TVK தன் பால் இழுத்து விடும். இதன் காரணத்தால் அதிமுக தற்போது 3வது இடம் நோக்கிச் செல்வதை அவதானிக்க முடிகிறது. விஜய் போட்டுள்ள கணக்குப்படி பார்த்தால், கணிசமான ஆசனங்களைப் பெற்று TVK தனியாக ஆட்சி அமைக்கும். அது தப்பினால், அதிமுக எடுத்த ஆசனங்கள் TVK கட்சியை விட குறைவாக இருப்பதனால், தானே முதல்வர், வாருங்கள் கூட்டாக ஆட்சியை அமைக்கலாம் என்று, விஜய் அழைப்பு விடுப்பார். வேறு வழி இன்று அதிமுக எடப்பாடி தான் துணை முதல்வர் என்று ஒப்புக் கொண்டு செல்லவேண்டி சூழ் நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

இந்த சூழ்நிலையில், செங்கோட்டையன் தவெக-வில் இணைவது கட்சிக்குப் பெரிய மாற்றத்தை உருவாக்கும். அவருக்கு அமைப்பு பொதுச் செயலாளர் பதவி, வழிகாட்டும் குழுத் தலைவர் பதவி போன்ற பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது முக்கியமாக, கூட்டணி பேச்சுவார்த்தை, வேட்பாளர் தேர்வு, அதிருப்தியாளர்களை சமரசப்படுத்துதல் போன்ற முக்கிய பொறுப்புகள் செங்கோட்டையனிடம் ஒப்படைக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.