Posted in

பீகார் படு தோல்வி ராகுல் காந்தி(காங்கிரஸ்) விஜயின் TVK பக்கம் தாவ உள்ளது ?

பீகார் தேர்தல் தோல்வியும் காங்கிரஸின் குழப்பமும்: விஜய்க்கு ஆதரவாகத் திரும்பும் அரசியல் களம்?

பீகாரில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் (BJP) கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. அங்கே உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் சுமார் 202 இடங்களை பாஜக கூட்டணிக் கட்சிகள் வென்று சாதனை படைத்துள்ள இதே வேளையில், காங்கிரஸ் கட்சி வெறும் 34 இடங்களையே கைப்பற்றியுள்ளது. முன்னதாக நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 112 இடங்களைக் கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.

இந்தத் தோல்விக்குப் பிறகு, தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் (தி.மு.க.) தான் கூட்டணியில் நீடிக்க வேண்டுமா என்ற நிலை காங்கிரசுக்குத் தோன்றியுள்ளது.

தி.மு.க. கூட்டணி: தொடர வேண்டுமா?

பீகாரைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் தோல்வியைத் தழுவினால், காங்கிரஸ் என்ற கட்சி அறவே வேர் அறுந்த நிலைக்குத் தள்ளப்படும். இதனால், அடுத்து நடக்க உள்ள தேர்தலில் தி.மு.க. கட்சி வெற்றியடைய வாய்ப்புகள் உள்ளதா? இல்லை, “தோற்கப் போகும் குதிரையோடுதான் நாங்கள் சவாரி செய்வதா?” என்று முடிவெடுக்க வேண்டிய கட்டாய நிலையில் காங்கிரஸ் உள்ளது.

இதனைத்தான் பொறுமையாக எதிர்பார்த்துக் கொண்டு இருந்தாரா தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவர் விஜய் என்பது தெரியவில்லை. ஆனால், தற்போது நடக்கும் பல சம்பவங்கள் விஜய்க்கு ஆதரவாகத் தான் திரும்பிக் கொண்டு இருக்கின்றன என்பதுதான் பெரும் ஆச்சரியமாக உள்ளது.

விஜயின் கணக்கு மற்றும் வியூகம்

பீகார் சட்டமன்றத் தேர்தல் நடப்பதற்கு முன்னரே, விஜய் ஒரு கணக்குப் போட்டு வைத்திருந்தார். அவரது குழு பீகார் குறித்த பல தகவல்களை முன்னரே விஜய்க்குத் தெரிவித்து இருந்தது. இந்தத் தேர்தல் முடிவுகள் இப்படித்தான் வரும் என்றும், காங்கிரஸ் படுதோல்வி அடையும் என்றும் விஜய்க்கு முன்னரே தெரியும் என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.

சமீபத்தில் மாமல்லபுரத்தில் நடந்த சிறப்புப் பொதுக்குழு கூட்டத்தில், ஆதவ் அர்ஜுனா பேசும்போது, TVK-க்கு 26 சதவீத வாக்கு வங்கி இருப்பதாக மேடையில் பகிரங்கமாகத் தெரிவித்தார். இது அவர்கள் எடுத்த புள்ளிவிவரம்.

ஆனால், இந்த 26 சதவீதத்தை வைத்து வெல்ல முடியாது என்பது ஊர் அறிந்த விஷயம். அப்படி என்றால், எப்படித் தனித்துப் போட்டியிடுவது என்றும், “எந்தக் கட்சியும் இணையலாம், ஆனால் முதல்வர் வேட்பாளர் விஜய் தான்” என்றும் எப்படி அறிவித்தார்கள்?

விஜயின் அரசியல் நகர்வு

ஆம்… அதாவது விஜய் போடும் கணக்கு என்னவென்றால்: சுமார் 4 மாவட்டங்களுக்குப் பிரச்சாரத்திற்குச் சென்றே 26 சதவீத வாக்குவிகிதம் உள்ளது என்றால், தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டால், அது சற்றுக் கூடி, 30 சதவீதம் முதல் 33 சதவீதம் வரை மாறும்.

அப்படி 30 சதவீதத்தைத் தொட்டு விட்டாலே ‘GAME’ ஆரம்பமாகி விடும். முதலில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு, பிரச்சாரங்களை நிகழ்த்தி, பின்னர் தி.மு.க.வை ஒரு கை பார்த்துவிட்டு, அதன் பிறகு ஒரு கருத்துக் கணிப்பை எடுத்து நாடி பிடித்துப் பார்ப்பது.

அதில் வரும் முடிவை வைத்து, மேற்கொண்டு என்ன செய்வது என்ற முடிவை விஜய் எடுப்பார். தி.மு.க. மற்றும் சீமான் சொல்வது போல விஜய் ஒன்றும் கத்துக்குட்டி அல்ல. அரசியல் தெரியாதவர் அல்ல. மிக மிகத் துல்லியமாகத் திட்டம் போட்டுதான் காய்களை அவர் நகர்த்தி வருகிறார்.

இன்று வரை அவர் வேறு எந்தக் கட்சியோடும் இணைவது தொடர்பாகப் பேசவில்லை. அவரை குறி வைத்தே மற்றக் கட்சிகள் அவரைத் தம் பக்கம் இழுக்க அலைந்து திரிகிறார்கள். இதனால், காங்கிரஸ் தனது கூட்டணியை உடைத்து TVK பக்கம் வர, இந்த பீகார் தேர்தல் முடிவுகள் ஒரு காரணமாக அமையும். பொறுத்திருந்து பார்க்கலாம்.