பிரான்ஸ் நாட்டில் இருந்து ஆறு மாதங்களுக்கு முன்னர் லண்டன் வந்த தமிழ் இளைஞர் ஒருவருக்கு, லண்டனில் விசா கிடைத்துள்ளது. இதனால் அளவு கடந்த சந்தோஷத்தில் இருந்த அவர், மது அருந்தி ஒரு பெரிய பார்ட்டியை நடத்தியுள்ளார். இந்தச் சம்பவம் சில வாரங்களுக்கு முன்னர் நடந்துள்ளது.
தாக்குதல் விவரம்:
லண்டன் சவுத்ஹால் பகுதியில் அவர் குடிபோதையில் இருந்துள்ளார். பின்னர், அவர் வீதிக்கு வந்து அங்கே ஒரு இடத்தில் போதையில் நின்றிருந்தார். அவரைக் குறிவைத்து சிலர் தாக்கியுள்ளார்கள். காரணம், அவர் கழுத்தில் இருந்த தங்க மாலை மற்றும் மோதிரங்கள் தான்.
அடித்துக் காயப்படுத்திய நபர்கள் அவரது நகைகளைக் கொள்ளையடித்துக் கொண்டு சென்றது மட்டுமல்லாமல், அவரைச் சரமாரியாகத் தலையில் தாக்கி, கீழே தள்ளிவிட்ட நிலையில், அவர் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். விரைந்து வந்த பாரா மெடிக்ஸ் குழுவினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்ற நிலையில், அவர் கோமா நிலைக்குச் சென்றுவிட்டதாகத் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
சவுத்ஹாலில் அதிர்வலை:
ஈழத் தமிழர்கள் மற்றும் இந்தியர்கள் அதிகம் வாழும் சவுத்ஹாலில் இப்படி ஒரு சம்பவம் நடந்தது பெரும் அதிர்வலைகளைத் தோற்றுவித்துள்ளது. தற்போது சவுத்ஹால் பிரதேசத்தில் ஆப்பிரிக்கர்கள் மற்றும் ருமேனிய நாட்டவர்களும் அதிகம் வசித்து வருகிறார்கள்.
குறிப்பாக ருமேனிய சமூக இளைஞர்கள் இது போன்ற பல திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் தமிழர்களையும் இந்தியர்களையும் குறிவைத்து செயல்பட்டு வருகிறார்கள்.
கொள்ளைத் தடுப்பு எச்சரிக்கை
வீடு புகுந்து நகைகளைக் கொள்ளையடிப்பதில் ருமேனிய இளைஞர்கள் கைதேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் சில தமிழர்கள் தங்கள் வீட்டு வேலைக்கு, இது போன்ற நபர்களை, அறியாமல் வேலைக்கு அமர்த்துவது வழக்கம். அவர்கள் முறையாக வீட்டை நோட்டமிட்டு, பின்னர் ஆட்கள் இல்லாத நேரத்தில் வந்து தமது கைவரிசையைக் காட்டிச் செல்வதும் பல இடங்களில் நடந்துள்ளது. எனவே, தமிழர்கள் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.