Posted in

விஜயின் ஒரு கேள்விக்கு 16 DMK அமைச்சர்கள் பதில் சொல்லியுள்ளார்கள்- நடுங்கும் DMK

தி.மு.க தேர்தல் வாக்குறுதிகளாக கொடுத்த 500 விடையங்களை முன்வைத்து, கடந்த தேர்தலில் வென்றுள்ளது. ஆனால் அவற்றில் முக்கியமான எதனையும் அவர்கள் நிறைவேற்றவில்லை என்று, பட்டியலிட்டு விஜய் திருச்சியில் பேசியது, தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால் DMK அரசில் உள்ள 16 அமைச்சர்கள் அவசரமாக மற்றும் தனித் தனியாக , ஊடகங்களுக்கு விளக்கம் சொல்லியுள்ளார்கள் என்றால், விஜய் அவர்களின் பேச்சு எந்த அளவு மக்கள் மத்தியில் சென்றுள்ளது என்பதனை உணர முடிகிறது. நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், அதிமுக தலைவர் எடப்பட்டி கூட இந்த அளவு புள்ளி விபரங்களோடு பேசியது இல்லை. இது DMK அரசின் அடி மடியில் கை வைத்தது போல இருக்கிறது. இதனால் ஆழும் DMK அரசு பெரும் அதிர்ச்சியில் உள்ளது. தமிழகத்தில் ஒரு மாற்றம் வேண்டும் ! என்ற பேச்சு மக்கள் மத்தியில் எடுபட ஆரம்பித்துள்ளது.  வரும் தேர்தலில் விஜய் அவர்கள் 50 தொடக்கம் 60 ஆசனங்களை கைப்பற்றி, ஒரு ஆக மாறக் கூடும். விஜயின் TVK யாருக்கு ஆதரவு கொடுக்கிறதோ அந்தக் கட்சியே ஆட்சியை அமைக்கும் நிலை கூடத் தோன்றலாம். இல்லையென்றால் ஆட்சியையே விஜய் கைப்பற்றவும் வாய்ப்புகள் உள்ளது. 

விரிவு:

மக்களின் மனசாட்சி! “வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க. அரசை நம்பாதீர்கள்!” – திருச்சியில் முழங்கிய விஜய்!

திருச்சி: நடிகர் விஜய்யின் அரசியல் பயணம் தொடங்கியுள்ள நிலையில், திருச்சியில் அவர் நடத்திய பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில், ஆளுங்கட்சியான தி.மு.க.வை நேரடியாக விமர்சித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. “அரசு கொடுத்த வாக்குறுதிகள் என்ன ஆனது?” என்று விஜய் எழுப்பிய கேள்வி, மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கிறது.

 

தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிகளுக்குப் பதிலளிக்க முடியுமா?

 

திருச்சி மரக்கடை பகுதியில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் பேசிய விஜய், தி.மு.க. அரசு கடந்த தேர்தலில் கொடுத்த 505 வாக்குறுதிகளில் பலவற்றை நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டினார்.

  • “பெண்களுக்கு ₹1,000 உரிமைத்தொகை எல்லோருக்கும் கிடைக்கிறதா?”
  • “பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டதா?”
  • “கல்விக்கடன் ரத்து செய்யப்பட்டதா?”
  • “2 லட்சம் அரசுப் பணியிடங்கள் நிரப்பப்பட்டதா?”

போன்ற கேள்விகளை அவர் அடுத்தடுத்து எழுப்பியது, தி.மு.க. அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அரசின் திட்டங்கள் சரியாகப் பொதுமக்களுக்குப் போய்ச் சேரவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

 

தி.மு.க.வின் கோட்டைக்குள்ளேயே அதிரடி!

திருச்சி, தி.மு.க.வின் கோட்டையாகக் கருதப்படுகிறது. இங்கு முக்கிய அமைச்சர்களான கே.என். நேரு மற்றும் அன்பில் மகேஷ் ஆகியோர் உள்ளனர். அவர்களின் சொந்த மாவட்டத்திலேயே விஜய் இத்தகைய கடுமையான விமர்சனங்களை முன்வைத்தது, அவரது அரசியல் துணிச்சலைக் காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

இந்த மாநாட்டில் பேசிய விஜய், “அரசியலுக்கு நான் பணம் சம்பாதிக்க வரவில்லை. நான் சேவை செய்ய வந்துள்ளேன்” என்று கூறியது, மக்கள் மத்தியில் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.