Posted in

விமானம் ரத்து, எல்லைகள் மூடல்! மர்ம பலூன்களால் உச்சக்கட்ட பாதுகாப்பு நெருக்கடி!

திடீரென வான்வெளியில் தோன்றிய மர்ம பலூன்களால் (Balloons) ஐரோப்பிய நாடான லித்துவேனியா (Lithuania) முழுவதும் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது!

ஆம்! அண்டை நாடான பெலாரஸின் (Belarus) எல்லைப் பகுதியில் இருந்து டஜன் கணக்கில் மர்மமான பலூன்கள் லித்துவேனியாவின் வான்வெளிக்குள் படையெடுத்துள்ளன! இவற்றைப் பார்த்ததும் பாதுகாப்புப் படைகள் அதிர்ச்சி அடைந்தன.

உடனடியாக எடுக்கப்பட்ட மிரட்டல் நடவடிக்கை:

தலைநகர் வில்னியஸ் விமான நிலையம் (Vilnius Airport) உடனடியாக மூடப்பட்டது! இதனால், நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன அல்லது வேறு வழியில் திருப்பி விடப்பட்டன. சுமார் 4,000 பயணிகள் நள்ளிரவில் தவித்தனர்!
பெலாரஸுடனான முக்கிய எல்லைக் கடக்கும் பாதைகள் (Border Crossings) அவசர அவசரமாக மூடப்பட்டன!
பலூன்களின் மர்மம் என்ன?

முதலில், இந்த பலூன்கள் எதிரி நாட்டின் உளவு வேலைக்காகவோ அல்லது வேறு ஏதேனும் ஆபத்தான நோக்கத்துடனோ அனுப்பப்பட்டிருக்கலாம் என்று அச்சம் ஏற்பட்டது. ஆனால், அதிகாரிகள் நடத்திய சோதனையில், இந்த பலூன்கள் சட்டவிரோதமாக சிக்ரெட்டுகளைக் கடத்துவதற்காக (Smuggling Cigarettes) பெலாரஸில் இருந்து அனுப்பப்பட்டவை என்று தெரியவந்துள்ளது.

பிரதமர் கடும் எச்சரிக்கை:

“இது வெறும் கடத்தல் அல்ல! வான்வெளி பாதுகாப்புக்கு நேரடி அச்சுறுத்தல்!” என்று கூறி லித்துவேனியப் பிரதமர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மீண்டும் ஒரு முறை இதுபோல நடந்தால், பெலாரஸுடனான எல்லையை நிரந்தரமாக மூடுவோம் என்று அவர் பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.

ஒரு சில கடத்தல்காரர்களின் பலூன்களுக்காக ஒரு நாட்டின் விமான நிலையமே மூடப்படும் அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது! இது பெலாரஸ் நிகழ்த்தும் ‘கலப்பினப் போர்’ (Hybrid Warfare) உத்தியின் ஒரு பகுதியா என்றும் சர்வதேச அளவில் கேள்வி எழுந்துள்ளது!