Posted in

185 தொகுதிகளில் விஜயின் TVK கட்சி வெற்றி பெறும்: அதிர்சியான கருத்து கணிப்பு !

தளபதி விஜய் அவர்கள் மதுரையில் நடத்தியுள்ள மாநாட்டைப் பற்றித்தான் இன்று முழு இந்தியாவுமே பேசிக்கொண்டு இருக்கிறது. இதேவேளை, “தல அஜித்” ரசிகர்கள் கூட, எங்கள் வாக்குகள் தளபதி விஜய்க்குத்தான் என்று வெளிப்படையாக அறிவித்துள்ளார்கள். மதுரை மாநாட்டில் விஜய் மற்றும் அவருடன் அஜித் சேர்ந்து இருப்பது போன்ற சுவரொட்டிகள் இருந்தன. இதனை அஜித் தரப்பு எதிர்க்கவில்லை. இந்த நிலையில் 18 வயது முதல் 25 வயதுள்ள வாக்காளர்களில் 80% சதவீதமானவர்கள் தமது வாக்கு விஜய்க்கு என்று கூறி வருகிறார்கள்.

இது போக 25 முதல் 45 வயது உடையவர்களில், 65% சதவீதமானவர்கள் தமது வாக்கு விஜய்க்குத்தான் என்று கூறி வருகிறார்கள். மேலும் 45 முதல் 75 வயதானவர்களை எடுத்துக்கொண்டால், 25% சதவீதமானவர்கள், விஜய்க்கு வாக்குப் போடுவோம் என்று கூறி வருகிறார்கள். தமிழ்நாட்டில் பல இடங்களில் இப்போதே வாக்குக் கணிப்பு இடம்பெற்று வருகிறது.

இதனை அடிப்படையாக வைத்துப் பார்த்தால், சுமார் 160க்கும் மேற்பட்ட தொகுதிகளில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) வெற்றிபெற வாய்ப்புகள் உள்ளதால், தவெக தனித்தே ஆட்சியை அமைக்கப் பெரும் வாய்ப்புகள் உள்ளது. தமிழ்நாட்டு மக்களைப் பொறுத்தவரை, அவர்கள் காலகாலமாக ஒரு விடயத்தைக் கடைப்பிடித்து வருகிறார்கள். அதாவது யாராவது அரசியலுக்குப் புதிதாக வந்தால் அவருக்கு ஒரு முறை வாக்கைப்போட்டுப் பார்க்கலாமே என்று கருதுவார்கள். அதுவும் நல்ல தலைவராக இருந்தால் மேலும் பல லட்சம் பேர் ஒரு மாற்றத்தை விரும்பி வாக்குப் போடுவார்கள். அந்த வகையில்தான் கேப்டன் விஜயகாந்த் வென்று, எதிர்க்கட்சித் தலைவர் ஆனார்.

ஆனால் இன்று விஜயகாந்தை விட, கமல்ஹாசனை விட, ஏன் ரஜினியை விட, தவெக தலைவர் விஜய்க்குப் பல மடங்கு ஆதரவு உள்ளது. இந்த ஆதரவு வாக்குகளாக மாறப்போகிறது. ஒரு மாற்றத்தை விரும்பும் மக்கள் கூட்டம் நிச்சயம் விஜய்க்குத்தான் வாக்குகளைப் போடுவார்கள். இது போக தவெக தலைவர் விஜய், BJP அரசை கடுமையாக எதிர்க்க ஆரம்பித்துள்ளார். இதனால் இயல்பாகவே மக்கள், விஜய் பக்கம் சாய்ந்து விடுவார்கள். 2026ல் நடக்கவுள்ள தேர்தல் இதுவரை தமிழகம் கண்டிராத வகையில் பெரும் சர்ச்சை நிறைந்த தேர்தலாக மாறவுள்ளது.

தன்னிடம் உள்ள கோடிக்கணக்கான பணத்தை தி.மு.க விட்டெறிய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. தி.மு.க கூட்டணி 35 முதல் 40 தொகுதிகளையே கைப்பற்ற முடியும். பல அரசியல் தலைவர்கள் இந்தத் தேர்தலில் தமது சட்டமன்ற உறுப்பினர் இடத்தை இழக்கக்கூடும். விஜய் என்ற ஒரு பெரும் சூறாவளி தற்போது தமிழ்நாட்டில் மையம் கொண்டுள்ளது என்றுதான் கூறவேண்டும். தமிழ்நாட்டில் மட்டும் அல்ல, இந்திய அளவில் தேசிய அரசியலில் விஜய் இறங்கப் பெரும் வாய்ப்புகள் உள்ளன. ஏனென்றால் விஜய்க்கு மலையாளம், தெலுங்கு, கன்னடம், என்று ஏனைய பல மாநிலங்களிலும் பெரும் ரசிகர் கூட்டம் உள்ளது.