Posted in

ஒரு டிக்டாக் Post -போட்டு சிக்கிய சிங்கம்: 2,000 பேரை கொலை செய்த வெறியன் !

சூடான் நாட்டின் கசாப்பு கடை என்று அனைவராலும் அழைக்கப்பட்ட, மற்றும் 2,000 பொது மக்களை பொது வெளியில் வைத்து பல தடவை கொலை செய்த நபர் தற்போது சிக்கிக் கொண்டுள்ளார் என்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. இவர் டிக்டாக்கில் போட்ட ஒரு போஸ்டை வைத்து, அமெரிக்கா கொடுத்த உளவுத் தகவலை அடுத்தே இவர் கைதாகியுள்ளதாக கூறப்படுகிறது.

கார்த்தூம், அக்டோபர் 31, 2025:

சூடானின் இரத்தம் தோய்ந்த பாலைவனத்தில், மனித உரிமைகளின் மீது நடத்தப்பட்ட மிகக் கொடூரமான தாக்குதல்களின் முகங்கள் இன்று வெளியானது! ரேபிட் சப்போர்ட் ஃபோர்ஸஸ் (RSF) அமைப்பைச் சேர்ந்த பிரிகேடியர் ஜெனரல் அல்-ஃபாத் அப்துல்லா இத்ரிஸ் – டிக்டாக்கில் ‘அபு லூலூ’ என்று அழைக்கப்படும் இந்தப் போர்க்குற்றவாளி, ‘இந்த நூற்றாண்டின் கசாப்புக்கடை”(Butcher of the Century) என்று உலகம் முழுவதும் பெயர் பெற்றவன்.

தனது சொந்த கைகளால் 2,000க்கும் மேற்பட்ட அப்பாவி உயிர்களைப் பறித்ததாக டிக்டாக் வீடியோக்களில் பெருமைப்படுத்தியபின்,அவரது சொந்த அமைப்பால் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது பெரும் அதிர்ச்சி. எல்-ஃபாஷர் நகரம் – சூடானின் டார்பர் பகுதியில் உள்ள இந்தக் கடைசி பாதுகாக்கப்பட்ட இடம் – கடந்தவாரம் RSF போர்வீரர்களால் கைப்பற்றப்பட்டது.

18 மாதங்களுக்கும் மேல் நீடித்த தாக்குதல்களுக்குப் பின், நகரம் விழுந்ததும், 48 மணி நேரத்தில் 2,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் – பெரும்பாலும் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர் – கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டனர் ! அப்பாவி குடும்பங்கள் தங்கள் உயிர்களை மீட்க ஓடினாலும், ற்ஸ்F போராளிகள் அவர்களைச் சுற்றி வளைத்து, குழந்தைகளைப் பெற்றோரின் கண் முன்னால் சுட்டுக் கொன்றனர்.

தற்போது இந்தக் கயவன் கைது செய்யப்பட்டுள்ளான் என்ற தகவல் வெளியாகியுள்ளது கீழே வீடியோ இணைப்பு !