Posted in

கள்ளத் தோணியில் வந்து சில நாட்களில் 15வயது சிறுமியை கற்பழித்த 17 வயது அகதிகள் !

பிரான்ஸ் நாட்டில் இருந்து, படகில் லண்டன் வந்து சில நாட்களே ஆன 2 ஆப்கான் இளைஞர்கள், 15 வயது பள்ளி மாணவியை இழுத்துச் சென்று பூங்கா அருகே கற்பழிக்க முயன்றுள்ளார்கள். இவர்கள் இருவருக்கும் 17 வயது தான் ஆகிறது என்பது அதிர்ச்சிகரமான தகவல். இவர்களில் ஒருவருக்கு 18 வயது ஆகி விட்ட நிலையில், அவர்கள் இருவரையும் சிறைச்சாலைக்கு அனுப்பியுள்ளது நீதிமன்றம். தலா 9 வருடங்கள் சிறைத் தண்டனையும். தண்டனை முடிவடைந்த மறு கணமே அவர்களை நாடு கடத்தவேண்டும் என்றும் நீதிபதி கடும் உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

விரிவாகப் பார்கலாம் : குற்றவாளிகள் யார் ?
குற்றவாளிகள் இருவரும் ஜான் ஜஹான்செப் (Jan Jahanzeb) மற்றும் இஸ்ரார் நியாஸல் (Israr Niazal).

இவர்கள் இருவரும் 17 வயதுடைய ஆப்கன் அகதிகள் ஆவர். சம்பவம் கடந்த மே 2025-இல் லீமிங்டன் ஸ்பாவில் உள்ள நியூபோல்ட் காமின் (Newbold Comyn) பூங்காவில் நடந்தது.

நடந்தது என்ன?
சிறுமி தன் நண்பர்களுடன் இருந்தபோது, இந்த இரண்டு இளைஞர்களும் அவரைப் பூங்காவின் தனிமையான, “அடைபட்ட குகை போன்ற” பகுதிக்கு வலுக்கட்டாயமாகக் கூட்டிச் சென்றனர். பாதிக்கப்பட்ட சிறுமி உதவி கேட்டு அழுததையும், சத்தமிட்டதையும் குற்றவாளிகள் புறக்கணித்தனர். சிறுமி தனது கைப்பேசியில் பதிவு செய்த காட்சிகளில், அவர் கண்ணீருடன் உதவிக்கு மன்றாடுவது பதிவாகி இருந்தது. ஜஹான்செப் அவர் வாயை மூடியதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

நீதிபதி சில்வியா டி பெர்டோடானோ (Judge Sylvia de Bertodano) தீர்ப்பளிக்கும்போது, அவர்கள் சிறுமியின் எதிர்ப்பை முழுவதுமாகப் புறக்கணித்தனர் என்றும், இந்தக் கொடூரச் செயல் அவளுடைய வாழ்க்கையை நிரந்தரமாக மாற்றிவிட்டது என்றும் வேதனையுடன் குறிப்பிட்டார்.

குற்றவாளிகள் இருவரும் முன்னரே குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.

வழங்கப்பட்ட தண்டனை:
இந்தக் கொடூரச் செயலுக்காக, வார்விக் நீதிமன்றம் (Warwick Crown Court) இருவருக்கும் நீண்ட கால சிறைத் தண்டனை விதித்துள்ளது: ஜான் ஜஹான்செப்: 9 ஆண்டுகள் மற்றும் 8 மாதங்கள் இளைஞர் தடுப்பு மையத்தில் (Youth Detention) சிறைத் தண்டனை. இவருக்கு ஏற்கெனவே நாடுகடத்தல் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

இஸ்ரார் நியாஸல்: 9 ஆண்டுகள் மற்றும் 10 மாதங்கள் இளைஞர் தடுப்பு மையத்தில் சிறைத் தண்டனை. இவரும் நாடுகடத்தப்பட வாய்ப்புள்ளது. நீதிமன்றம், குற்றவாளிகளின் அடையாளங்களைப் பாதுகாக்கும் கட்டுப்பாடுகளை நீக்கியதுடன், சட்டம் மற்றும் நாட்டின் புகலிட விதிகளுக்கு மதிப்பளித்து வாழும் அகதிகளுக்கு இவர்கள் துரோகம் செய்துவிட்டனர் என்றும் கண்டித்தது.