இனவெறி காரணமாகவும், “ஒரு பெண் எங்களை ஆட்சி செய்வதா?” என்றும் நினைத்த அமெரிக்க மக்கள்தான், டொனால்ட் டிரம்புக்கு வாக்களித்தார்கள். உண்மையில் அமெரிக்காவை நல்ல விதமாகக் கொண்டு செல்லக் கூடிய கமலா ஹாரிஸை அமெரிக்க மக்களில் 51 சதவீதத்தினர் புறக்கணித்தார்கள். அதன் பலனை இன்று அனுபவிக்கிறார்கள்.
வயதாகி, புத்தி தடுமாறி, அத்துடன் ஏட்டிக்கு போட்டியாகச் செயல்படும் டிரம்பை அரியணையில் அமர்த்திய அமெரிக்க மக்கள், இன்று “துண்டைக் காணோம், துணியைக் காணோம்” என்று ஓடுகிறார்கள்.
தற்போது அமெரிக்கா பெரும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. சமீபத்தில் அமெரிக்க அரசாங்கத்தின் கட்டாய பணிநிறுத்தம் (Government Shutdown) காரணமாக 1000-க்கும் அதிகமான விமான சேவைகள் பாதிக்கப்பட்டு, அமெரிக்காவில் விமானங்கள் தரையிறங்க முடியாத நிலை தோன்றியுள்ளது. இது இவ்வாறு இருக்க, உலக நாடுகள் பலவற்றோடு பகையை வளர்த்து வைத்துள்ள டிரம்பால், அந்நாட்டில் மாட்டிறைச்சி விலை பன்மடங்காக அதிகரித்துள்ளது. மேலும் சொல்லப் போனால், மாட்டு இறைச்சியைப் பார்ப்பதே அரிதாக உள்ளது.
கனடா-அமெரிக்க எல்லையில் வசிக்கும் மக்கள், காரில் கனடாவுக்குள் சென்று பொருட்களை வாங்கி மீண்டும் திரும்புகிறார்கள். இப்படி பெரும் இக்கட்டான நிலைக்கு அமெரிக்கா சென்றுள்ளது. முட்டை விலையும் அதிகரித்துள்ளது. இதேவேளை, அமெரிக்கா எந்தப் பொருட்களை இறக்குமதி செய்து வந்ததோ, அந்தப் பொருட்களைத் தற்போது இறக்குமதி செய்ய முடியவில்லை. இதற்கு வெளிநாடுகளின் சதியே காரணம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளிநாடுகள் மீது பழியைப் போட்டுள்ளார்.
தன் திறமையின்மை (கையாகாலாத்தனம்) மற்றும் ஈகோவால் தான் அமெரிக்கா இன்று இப்படி ஒரு கேவலமான நிலையில் உள்ளது என்பதனை ஏற்றுக் கொள்ள அதிபர் டிரம்ப் மறுத்து வருகிறார். அமெரிக்க டாலரின் பெறுமதியும் பெரிய அளவில் வீழ்ச்சி கண்டுள்ளது. இதன் காரணமாகத்தான் தங்கத்தின் விலையும் அதிகரித்து வருகிறது.
சீனாவும் அமெரிக்காவைப் பழிவாங்கத் தவறவில்லை. சீனா, அரிய கனிமங்களை (Rare Earth Minerals) அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யவில்லை. இதனால் அமெரிக்கா தயாரிக்க இருந்த வான் பாதுகாப்பு ஏவுகணைத் திட்டம் (Air Defense Missile Program) நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இப்படி பல வெளிநாடுகளை நம்பி இயங்கி வந்த அமெரிக்கா, எப்படி இந்த நாடுகளைப் பகைவராக்கியுள்ளது? அது போக, நேச நாடுகளையும் அமெரிக்கா பகைத்துள்ளது. “ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்” என்று தமிழர்கள் கூறுவார்கள். அது அமெரிக்காவுக்கு நன்றாகப் பொருந்தும்.
என்று டிரம்ப் ஆட்சி விலகுகிறாரோ, அன்றுதான் அமெரிக்கா உருப்படும்.