இலங்கையில் சிங்களவர்கள் தமிழர்களை கொன்று குவிக்க, உயிரை பாதுகாக்க நாட்டை விட்டு தப்பியோடத் தொடங்கிய தமிழர்கள், அதற்கு ஒரு முடிவே இல்லாமல் போய் விட்டது என்று தான் சொல்லவேண்டும். கடந்த 28ம் திகதி, ஐரோப்பா கண்டத்தில் உள்ள லத்வியா மற்றும் பெலரூஸ் நாட்டு எல்லையில், 2 இலங்கைத் தமிழர்களை பெலரூஸ் நாட்டு ராணுவம் கண்டுள்ளது.
இதில் ஒருவர் ஏற்கனவே இறந்து விட்டார். மற்றைய நபர் குற்றுயிரும் குலையுமாக இருந்துள்ள நிலையில். உடலையும் அடி காயங்களோடு தப்பிப் பிழைத்த அந்த நபரையும் ராணுவம் மீட்டு, தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. பலர் வேலை வாய்ப்புக்காக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்கிறார்கள். அதிலும் குறிப்பாக றொமேனியா, போலந்து, லத்வியா, லித்துவேனியா , எஸ்டோனியா, பெலரூஸ் என்று பல நாடுகள் கடும் இனத் துவேசம் மிக்க நாடுகள். அவர்கள் பார்வையில் , இந்தியர் , இலங்கையர் என்று எல்லாம் கிடையாது. அனைவருமே முஸ்லீம்கள் தான்.
லத்வியா நாட்டில் இப்படி நடப்பது 78 வது தடவை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. இதுவரை 78 வேற்றின மக்களை லத்விய பொலிசார், ராணுவம் மற்றும் பொது மக்கள் அடித்தே கொலை செய்துள்ளார்கள். பின்னர் அவர்களின் உடல்களை, காட்டில் உள்ள மிருகங்களுக்கு இரையாக்குவது அவர்கள் வழக்கம். அதுபோலவே ஒரு காட்டில் இந்த 2 இலங்கையர்களையும் மிகக் கொடூரமாக அதுவும் காட்டு மிராண்டிகள் போலத் தாக்கி அவர்களை அங்கே போட்டுச் சென்றுள்ளது லத்விய நாட்டு பொலிஸ்.
ரஷ்ய அரசின் பொம்மையாக செயல்படும், பெலரூஸ் நாடு, ஏதோ தாம் மிகவும் ஜனநாயகம் மிக்க நாடு என்று காட்டிக் கொள்ள இந்த விசாரணையை கையில் எடுத்துள்ளது. வைத்தியசாலையில் உள்ள நபர் உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கிறார், என மேலும் அறியப்படுகிறது.