எப்போதும் பிரீமியம் (Premium) விலையில் மட்டுமே லேப்டாப்களை விற்பனை செய்து வந்த ஆப்பிள் நிறுவனம், தனது கொள்கையை மாற்றி, குறைந்த விலை லேப்டாப் சந்தையில் நுழையத் தயாராகி வருவதாக ‘ப்ளூம்பெர்க்’ செய்தி வெளியிட்டுள்ளது!
கோல்ட்மேன் சாக்ஸ் மற்றும் விண்டோஸ் (Windows) லேப்டாப்களுக்குப் போட்டியாக, முதன்முறையாக பட்ஜெட் விலை ‘மேக்’ (Budget Mac) சாதனத்தை ஆப்பிள் உருவாக்கிக் கொண்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தற்போதைய மேக்புக் ஏர் (MacBook Air) மாடலின் விலை $999-ல் இருந்து தொடங்கும் நிலையில், இந்த புதிய பட்ஜெட் மாடல் அதன் விலையை விடக் குறைவாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- இது முக்கியமாக மாணவர்கள் (Students), சிறு வணிகர்கள் மற்றும் இணையத்தில் உலவுதல் போன்ற சாதாரணப் பணிகளுக்கு ஒரு பாரம்பரிய லேப்டாப்பை விரும்புபவர்களைக் குறிவைக்கிறது.
- தற்போது ஐபேட் (iPad) மற்றும் கீபோர்டு காம்போவை வாங்குபவர்களையும் இந்தப் புதிய மேக் லேப்டாப் பக்கம் திருப்ப ஆப்பிள் திட்டமிடுகிறது.
தற்போது J700 என்ற குறியீட்டுப் பெயரில் உருவாக்கப்பட்டு வரும் இந்தப் புதிய லேப்டாப், ஆப்பிளின் புதிய A18 Pro சிப்பைக் கொண்டிருக்கும் என்றும், அதன் உற்பத்தி ஆரம்பக் கட்டத்தை எட்டியுள்ளது என்றும் ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.
இந்த புதிய, குறைந்த விலை ‘மேக்’ லேப்டாப் 2026 ஆம் ஆண்டின் முதல் பாதியில் சந்தைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது!