ஹரோ மாநகராட்சியின் கீழ் வேலை பார்க்கும் இந்த கார் தூக்கும் கம்பெனி, சுமார் 14 நாட்களில் 36 கார்களை தூக்கிச் சென்றுள்ளது. இவர்கள் சேவையை ஹரோ கவுன்சில் முடிக்கி விட்டுள்ளது என்று அறியப்படுகிறது. இதனால் இவர்கள் கண்ணில் விளக்கெண்ணையை ஊற்றிக் கொண்டு கடுமையாக வீதிகளில் தேடி வருகிறார்கள். அப்படி என்றால் என்ன நடக்கும் என்று தானே உங்கள் அடுத்த கேள்வியாக இருக்கும். வாருங்கள் மேட்டருக்கு வரலாம் !
பொதுவாக லண்டனில் பார்கிங் டிக்கெட்டை வழங்கும் போது, அதனை கொடுக்கும் உத்தியோகஸ்தர் 5 நிமிடம் காத்திருக்க வேண்டும். பின்னர் உங்கள் காரின் நம்பர் பிளேட்டை பதிவு செய்து அதன் பின்னர் மேலும் ஒரு 5 நிமிடம் கழித்தே, அவரால் பெனால்டி டிக்கெட்டை வழங்க முடியும். குறைந்த பட்சம் 10 நிமிடங்களுக்குள் அவரால் சட்டப்படி பெனால்டி டிக்கெட்டை கொடுக்க முடியாது. அதனை நீங்கள் முதலில் புரிந்து வைத்திருந்தால், எதிர்த்து வாதாட முடியும். மற்றும் மருத்துவ தேவை, இல்லையென்றால் பொலிசார் வருகைக்காக நீங்கள் காத்திருந்தீர்கள் என்று நிரூபித்தால், பெனால்டி டிக்கெட்டை கவுன்சில் கான்சல் செய்ய வேண்டும்.
மேலும் சீ-பிரா அடையாளம் உள்ள வீதி,சிவப்பு கோடு மற்றும் இரட்டை சிவப்பு கோடு உள்ள இடங்களில் நீங்கள் காரை பார்க் செய்தால் மட்டுமே உங்கள் காரை அகற்ற இந்த தனியார் நிறுவனங்களுக்கு உரிமை உண்டு. இவர்களே கார்களை தூக்கிச் சென்று ஒரு இடத்தில் அடைத்து வைக்கிறார்கள், சுமார் £160 பவுண்டுகள் தொடக்கம், £260 பவுண்டுகள் வரை அறவிடப்படுகிறது. இந்த தொகையைக் கட்டினால் மடுமே காரை விடுவிப்பார்கள். ஆனால் தற்போது மேலும் ஒரு நடை முறையை புதிதாக கவுன்சில் செயல்படுத்துகிறது.
அது என்னவென்றால் சாதாரண ஒரு இடத்தில் நீங்கள் உங்கள் காரை பார்க் செய்து, நேரம் காலாவதியாகி, இல்லையென்றால் கவுன்சில் வார்டனால் உங்களுக்கு ஏற்கனவே பெனால்டி தரப்பட்டு, அதனை நீங்கள் கட்டாமல், தண்ணி காட்டி வந்திருந்தால். உங்கள் காரை நீங்கள் பொது வீதியில் எங்காவது பார்க் செய்து இருந்தால் உடனே உங்கள் காரை இந்த தனியார் நிறுவனம் தமது வாகனத்தில் தூக்கிச் சென்றுவிடும். நான் சரியான இடத்தில் தான் காரை பார்க் செய்து உள்ளேன் என்று நீங்கள் வாதாட முடியாது. காரணம் அவர்கள் கூறுவார்கள் நீங்கள் ஏற்கனவே, முன்னர் கவுன்சில் பெனால்டியை கட்டவில்லை என்று.
பிரித்தானியாவில் ஒவ்வொரு வீடும் மாதம் £120 பவுண்டுகளுக்கு குறையாமல் கவுன்சில் வரியை கட்டி வருகிறார்கள், சில இடங்களில் மாதம் 200 பவுண்டுகள் மேலும் சில இடங்களில் மாதம் 300 பவுண்டுகள் கூட கவுன்சில் டாக்ஸ் அறவிடப்படுகிறது. இந்த வருமாணத்தை வைத்தே கவுன்சில் பொலிசாருக்கு, தீ அனைக்கும் படைக்கு, பள்ளிகளுக்கு என்று அனைத்துச் செலவுகளையும் பார்த்துக் கொள்கிறது. எனவே அரசாங்கம் கவுன்சிலுக்கு பணத்தை கொடுப்பதே இல்லை. அப்படி என்றால் VAT வரி, கார் டாக்ஸ், TV லைசன்ஸ், சம்பள வரிப் பணம், நஷனல் இன்சூரன்ஸ் என்று கழிக்கப்படும் தொகை, எல்லாமே பிரித்தானிய அரசு கஜானாவுக்குச் செல்கிறது.
இப்படியாக மக்கள் உழைத்து சம்பாதிக்கும் பணத்தில் சுமார் 60% விகிதத்தை அரசும் கவுன்சிலும் பிடுங்க, மீதி உள்ள 40% விகிதத்தில் தான் பிரித்தானிய மக்கள் வாழந்து வரும் நிலை காணப்படுகிறது. இதில் போதாக் குறைக்கு , வீட்டு லோன் வேறு. இப்படி நடுத்தர வர்கத்தை 600 வருடங்களாக நடுத்தர மக்களாகவே வைத்திருக்கிறது பிரித்தானியா. ஆனால் நீங்கள் மாறாக வியாபாரம் செய்பவர் என்றால், விரைவில் பெரும் செல்வந்தர் ஆகி விடுவீர்கள். காரணம் வரி ஏய்ப்பு, மற்றும் பல சலுகைகள் உள்ளது.
எனவே பிரித்தானியாவில் உங்கள் காரை தூக்கினால், உங்கள் உரிமை என்ன உள்ளது ? உங்களுக்கு பெனால்டி டிக்கெட்டை தந்தார்களா ? அதனை மறுக்க என்ன உள்ளது ? மேலும் சொல்லப் போனால் , நீங்கள் வேகமாக காரை ஓட்டி, ஸ்பீட் டிக்கெட் வந்தால் அதனை எப்படி மறுப்பது ? இது போன்ற பல விடையங்கள் உள்ளது .. உண்மையில் ஸ்பீட்டாக காரை ஓடி கமராவில் மாட்டிக் கொண்டால், உங்கள் லைசன்சில் பாயின்ஸ் போகமல் எப்படி தப்புவது என்பது கூட சட்டப்படி , விதி முறைகள் உள்ளது. சில காரணங்களை காட்டினால், அதில் இருந்து தாப்ப முடியும். தேவை என்றால், நிபுணத்துவர் “”சிவா”” வை தொடர்பு கொள்ளவும். அவரது ஈமெயில் : [email protected]