Posted in

லண்டன் றோட்டில் ஸ்பனர் கொண்டு அடிபடும் காடையர்: பொலிசார் வரவே இல்லை !

நேற்றைய தினம்(09) லண்டன் என்ஃபீல்டில் உள்ள, ( Hertford Road,) வீதியில் நடந்த சம்பவம் பலரை அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது. ஒரு காரை மற்றுமொரு கார் முந்த முனைந்துள்ளது, அவர்கள் இருவருக்கு இடையே சண்டை மூண்டது. இதனால் காரில் இருந்து ஸ்பனர் சகிதம் இறங்கி வந்த காடையன், மற்றக் காரை தாக்க, பெரும் கலகம் தொடங்கியது. கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள், என்ன கொடுமை ? இப்படி லண்டன் ஆகிவிட்டதா என்று எண்ணத் தோன்றும்.

இவர்கள் வேறு யாரும் இல்லை, றொமேனியா, போலந்து, லித்வேனியா போன்ற நாடுகளில் இருந்து லண்டனுக்கு குடியேறியவர்கள் தான். ஆனால் பொலிசார் சம்பவ இடத்திற்கு சரியான நேரத்திற்கு வரவில்லை. தற்போது சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தமக்கு உதவி செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்கள். இதுபோன்ற சம்பவங்கள், ஜேர்மனி அல்லது சுவிசில் நடந்தால்… பொலிசார் என்ன செய்வார்கள் என்பது ஊர் அறிந்த உண்மை.