COLOMBO: 16-11-2025 முழு வீடியோவும் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
இலங்கை அறுகம்பையில், வெளிநாட்டு பெண் ஒருவர், ஆட்டோ ஒன்றை வாடகைக்கு எடுத்து, சுற்றுலா பயணம் மேற்கொண்டு வருகிறார். இவர் சமீபத்தில் கடல் கரைக்கு சென்று, அங்கே தரித்து நின்றவேளை, மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் குறித்த பெண்ணை பார்த்து பேசியுள்ளதோடு. பின்னர் அவர் செலுத்தும் ஆட்டோவை பின் தொடர்ந்தும் சென்றுள்ளார்.
ஒரு கட்டத்தில் அந்தப் பெண் ஆட்டோவை நிறுத்தி விட்டு உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டவேளை, செக்ஸ் என்று பதில் கூறிய அந்த நபர். திடீரென தனது மர்ம உறுப்பை திறந்து காட்டியும் உள்ளார். ஆனால் வெள்ளை இனப் பெண்கள் பொதுவாக உஷாராகத் தான் இருப்பார்கள் என்பதனை இவர் புரிந்துகொள்ளவில்லை. காரணம் ஆட்டோவில் கமரா ஒன்று மறைத்து வைக்கப்பட்டு இருந்துள்ளது. அதில் அனைத்தும் பதிவாகியுள்ள நிலையில்.
தனக்கு நடந்த சம்பவத்தை பெண் வீடியோவாக சமூக வலையத் தளத்தில் வெளியிட்டுள்ளார். இதனை அடுத்து இலங்கை தொடர்பாக பல குற்றச்சாட்டுள் எழுந்துள்ள நிலையில். இலங்கைக்கு அவ கீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் நடந்தார் என்றும், பொது இடத்தில் அநாகரீகமாக நடந்தது மற்றும், தொடர்பான பிரிவுகளில் பொலிசார் இவர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள் என்று அறியப்படுகிறது.
சற்று முன் கிடைத்த தகவல் அடிப்படையில் இவர் கைதாகியுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இதனை உறுதி செய்ய முடியவில்லை.