Posted in

UberEats Driver தனது உணவை கொண்டு வரவில்லை என்று 999 பொலிசாருக்கு அழைத்த நபர் !

லண்டன்: உணவு விநியோகத்தில் தாமதம் அல்லது பொருட்கள் கிடைக்காதது போன்ற சிறு சிக்கல்களை, தீவிர அவசர சேவை எண் 999-க்கு புகார் செய்வது எவ்வளவு அபத்தமான செயல் என்பதை ஒரு சம்பவம் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

இங்கிலாந்தின் KENT மாவட்டத்தில் ஒருவர், தமக்காக வந்த உபர் ஈட்ஸ் (Uber Eats) விநியோகஸ்தர் உணவு பொட்டலங்களைக் கொண்டு வரவில்லை என்று கோபத்தில் 999-ஐச் சுற்றி, புகார் செய்தார். இச்சம்பவத்தை KENT Police தங்கள் சமூக ஊடகப் பக்கத்தில் பகிர்ந்து, பொது மக்களுக்கு ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அந்த அழைப்பை மேற்கொண்ட நபர், பொலிசாருக்கு அழைத்து தனக்கு உணவு கிடைக்கவில்லை என்றும் காலி பொட்டலத்தோடு டிரைவர் வந்ததால் தான் கோபத்தில் உள்ளதாகவும் இதனை கொட்டித் தீர்க்கவே அவசர எண் 999க்கு அழைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். என்ன கொடுமை சரவணா ? இது என்ன வம்பாபோச்சு என்று , பொலிசார் சிரிப்பதா அழுவதா என்று தெரியாமல் திண்டாடி உள்ளார்கள்.

இந்த “அபத்தமான” அழைப்பைப் பெற்ற போலீசார், அந்த நபருக்கு 999 எப்போது பயன்படுத்தப்பட வேண்டும் என்பதைப் பற்றி விளக்கினர். ஒரு உணவு விநியோக சிக்கல் போன்ற சாதாரண பிரச்சினைகளுக்கு அவசர சேவைகளைத் தொந்தரவு செய்வது, பெரும் ஆபத்தான சூழ்நிலைகளில் உள்ள மக்களுக்கு உதவுவதைத் தாமதப்படுத்தும் என்று போலீசார் தெளிவுபடுத்தினர்.

கென்ட் போலீசு தங்கள் X- பக்கத்தில் இந்த சம்பவத்தைப் பகிர்ந்து கொண்டு, “உங்கள் உபர் ஈட்ஸ் ஆர்டர் கிடைக்கவில்லை என்றால், அது 999-க்கு ஒரு காரணம் அல்ல. உண்மையான அவசரநிலைகளுக்கு மட்டுமே இந்த எண்ணைப் பயன்படுத்துங்கள்” என்று கடுமையாகக்  கண்டித்துள்ளனர்.