Posted in

தமிழர் கடையில் பெற்றோலை ஊற்றி புதுவிதக் கொள்ளை: ஜாக்கிரதை தமிழர்களே

கடைகளில் வேலை பார்க்கும் சில தமிழர்கள், தங்கள் முதலாளிக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்று நினைத்துக் கடையில் நடக்கும் ஆபத்தான சம்பவங்களில் நேரடியாகத் தலையிடுவது எவ்வளவு அபாயகரமானது என்பதைக் காட்டும் வீடியோ இது. பொதுவாகக் கடைக்குக் கொள்ளையர்கள் வந்தால், நம்முடைய வீர தீரத்தைக் காட்டுவதைத் தவிர்த்து, கொள்ளையடிக்க வந்த நபரை எப்படிச் அமைதிப்படுத்தி வெளியே அனுப்ப முடியும் என்று சிந்தித்துச் செயல்படுவதே புத்திசாலித்தனம்.

சமீபத்தில் பிரித்தானியாவில் உள்ள ஒரு கடையில் நடந்த சம்பவத்தின் வீடியோ இது. பொதுவாகக் கொள்ளையர்கள் கத்தி அல்லது துப்பாக்கியுடன் வருவது வழக்கம். ஆனால், இங்கே ஒரு கருப்பின நபர் வித்தியாசமான முறையில் பெட்ரோல் கேனுடன் வருகிறார். வந்தவுடன் பெட்ரோலை ஊற்றிவிட்டு, “கடையைப் பற்றவைக்கப் போகிறேன், பணத்தைக் கொடு” என்று மிரட்டுகிறார்.

அப்போது கடையில் இருந்த தமிழ் நபர், அந்த நபருடன் மல்லுக்கட்டி அவரை வெளியே துரத்தலாம் என்று தாக்க முயன்றார். ஆனால், அதன் பிறகு நிலைமை மோசமானது. கடைக்கு வெளியே நின்றிருந்த கொள்ளையனின் நண்பர் உள்ளே வந்து, இருவரும் சேர்ந்து அந்தத் தமிழ் நபரைத் தாக்கியுள்ளனர். ஒருவேளை அவர்கள் கையில் இருந்த சிகரெட் லைட்டரைத் தற்செயலாகப் பற்றவைத்திருந்தாலும், அந்தத் தருணத்தில் கடை முழுவதுமாக எரிந்து நாசமாகி இருக்கும்.