Posted in

உக்ரைனில் குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷ்யாவின் வெறித் தாக்குதல்!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர், மனித நேயமற்ற உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது! அமைதிப் பேச்சுவார்த்தைகள் குறித்த நம்பிக்கைகள் அனைத்தும் தகர்ந்துள்ள நிலையில், ரஷ்யப் படைகள் தெற்கு உக்ரைனில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை மீது கொடூரத் தாக்குதலை நடத்தியுள்ளன.

ரஷ்யாவின் இந்தத் தாக்குதலில் குறைந்தது ஒன்பது பேர் காயமடைந்தனர், இதில் நான்கு பிஞ்சுக் குழந்தைகளும் அடங்குவர்.இந்தத் தாக்குதல், ரஷ்யப் படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த கெர்சன் நகரில் நடந்துள்ளது. மருத்துவமனையின் ஜன்னல்கள் நொறுங்கி, சிகிச்சை அறைகளில் ரத்தக் கறைகளும், சிதறிக் கிடக்கும் மருத்துவ உபகரணங்களுமாகக் காட்சியளிக்கும் காட்சிகள் வெளியாகி உலகையே உலுக்கியுள்ளன. இது திட்டமிட்ட தாக்குதல் என்றும், அமைதிக்கு எதிரான ரஷ்யாவின் நிலைப்பாட்டைக் காட்டுவதாகவும் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார்.

குழந்தைகள் மருத்துவமனை மீதான இந்த பயங்கரத் தாக்குதலுக்குப் பதிலடியாக, உக்ரைன் தலைநகர் கீவ் (Kyiv) ரஷ்யாவின் எரிசக்தி மையங்களைத் தாக்கியுள்ளது.

உக்ரைன், ரஷ்யாவின் எல்லைப் பகுதிகளிலுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் எரிவாயு நிலையங்களை ஆளில்லா விமானம் (Drone) மூலம் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

30இதற்குப் பிரதிபலனாக, ரஷ்யாவின் தனித் தாக்குதல்களால் ஒடேசா பகுதியில் 27,000 வீடுகளுக்கு மின்சாரம் தடைபட்டுள்ளது.

போர் விதிமுறைகளை மீறி, அப்பாவி குழந்தைகளையும் மருத்துவமனைகளையும் குறிவைத்து நடத்தப்படும் இத்தகைய தாக்குதல்கள், உலக அரங்கில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன!