அதிர்ச்சி! “தேவதைகளைப் பாருங்கள்!” – லண்டன் பெண்களைக் காட்டி மனிதக் கடத்தல்! பாகிஸ்தான், இந்தியர்களைத் தூண்டும் ‘நிழல் கும்பல்’!
பிரிட்டனில் புலம்பெயர்ந்தோர் மீதான பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ‘டெய்லி மெயில்’ பத்திரிகை நடத்திய விசாரணையில், இளம் பிரிட்டிஷ் பெண்களின் வீடியோக்களைத் திருடி, சட்டவிரோதக் குடியேற்றத்திற்கு விளம்பரப்படுத்தும் ஒரு மோசடிக் கும்பல் அம்பலமாகியுள்ளது! லண்டன் சாலைகளில் செல்லும் அப்பாவியான பெண்களைக் குறிவைத்து, இந்தக் கும்பல் கொடூரமான சதித் திட்டத்தை அரங்கேற்றி வருகிறது!
அப்பாவிகளின் காட்சிகளைத் திருடும் கும்பல்!
ஆட்கடத்தல் குற்றக் கும்பல்கள், லண்டன் சாலைகள், பப்கள் மற்றும் கிளப்களில் இருக்கும் இளம் பிரிட்டிஷ் பெண்களின் வீடியோக்களை ரகசியமாகப் பதிவு செய்கின்றன.
பெண்களுக்குச் சம்மதம் இல்லாமலேயே அந்த காட்சிகளை டிக்டாக், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் ஆயிரக்கணக்கான ஃபாலோயர்களுடன் பரப்பி வருகின்றனர்.
இந்த வீடியோக்களில், பெண்கள் உற்சாகமாக நடனமாடுவது, சிரிப்பது மற்றும் குறைந்த ஆடைகளுடன் இருப்பது போன்ற காட்சிகள் இடம்பெறுகின்றன.
“இங்கிலாந்து வாருங்கள், இங்குள்ள பெண்கள் இப்படித்தான்!”
இந்தத் திருடப்பட்ட வீடியோக்கள் மூலம், இந்தக் கும்பல் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், மத்திய கிழக்கு மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் உள்ள ஆண்களை ஐக்கிய ராஜ்யத்திற்குச் சட்டவிரோதமாக வரத் தூண்டுகிறது!
“இங்குள்ள பெண்கள் இப்படித்தான் இருப்பார்கள், நீங்கள் இங்கிலாந்து வாருங்கள்” என்ற பாணியில், பிரிட்டிஷ் வாழ்க்கை முறையின் கவர்ச்சியைக் காட்டி, தங்கள் சட்டவிரோதக் கடத்தல் சேவைகளை வெளிப்படையாக விளம்பரப்படுத்துகின்றனர்.
ஒரு டிக்டாக் பயனர் வெளிப்படையாகவே, சட்டவிரோதமாக இங்கிலாந்துக்குள் நுழைய ஏற்பாடுகள் செய்து தருவதாகக் கூறியுள்ளார். சிறிய படகுகளில் ஆங்கிலக் கால்வாயைக் கடப்பது, ‘ஷெங்கன் விசா’ மூலம் ஐரோப்பா சென்று அங்கிருந்து பிரிட்டனுக்குள் சட்டவிரோதமாக நுழைவது போன்ற வழிகளை விளம்பரப்படுத்துகிறார்.
இந்தப் பதிவுகளில், ஆட்கடத்தல்காரர்கள் தாங்கள் வைத்திருக்கும் லட்சக்கணக்கான யூரோ பணக் கட்டுகளைக் காட்டி, வெளிநாட்டவர்களை ஈர்க்கின்றனர்.
ஆபத்து என்ன?
சட்டவிரோதமாகக் குடியேறத் தூண்டப்படும் இந்த வெளிநாட்டினர், இங்கிலாந்துக்குள் நுழைந்த பிறகு பாலியல் வன்முறைகள் உட்படப் பல குற்றங்களில் ஈடுபட இந்தக் காட்சிகள் காரணமாக அமைகின்றன என்று கூறப்படுகிறது.
லண்டனின் சமூக வலைத்தளங்களில் ஆதிக்கம் செலுத்தும் இந்த பாகிஸ்தான் அல்லது ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர், தற்போது பிரிட்டனில் வசிப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது.