20ம் திகதி இரவு சரியாக 9:14 மணிக்கு பொலிசாரின் அவசர சேவைப் பிரிவு(999) க்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. நடு நடுங்கிக் கொண்டு பேசிய பெண், எங்கள் வீட்டின் கதவை ஒருவர் உடைத்துக் கொண்டு இருக்கிறார். எந்த நேரமானாலும் அவர் உள்ளே வரக் கூடும் என்று பேசியுள்ளார். இதனை அடுத்து 12 பொலிசார் Eastcote Avenue வீதிக்கு 4 வாகனத்தில் செல்ல. அத்தோடு அவசர சேவைப் பிரிவினர் ஆம்பூலன்ஸ் மூலம் அங்கே விரைந்துள்ளார்கள்.
முற்று முழுதாக Eastcote Avenue வீதியை மறித்து முடக்கிய பொலிசார், வீட்டை சுற்றிவளைத்துள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்த தமிழர்கள் ஒருவர் அதிர்வு இணையத்திற்கு தெரிவித்துள்ளார். உள்ளே நுளைந்த பொலிசார் 25 வயதுடைய பெண்ணை காயங்களோடு மீட்டுள்ளார்கள் என பொலிசார் வெளியிட்ட தகவல் மூலம் அறியப்படுகிறது. அத்தோடு 28 வயதுடைய நபரையும் பொலிசார் காயங்களோடு கைது செய்து, இருவரையும் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளார்கள்.
இது கணவன் மனைவிக்கு இடையேயான தகறாரா இல்லை, கதவை உடைத்து திருடச் சென்றாரா இல்லை பிரிந்து வாழும் காதலர்களுக்கு இடையே ஏற்பட்ட முரண்பாடா என்பது தொடர்பாக பொலிசார் மேற்கொண்டு எந்த தகவலையும் வெளியிடவில்லை. இரவு நேரத்தில் அதுவும் துணிச்சலாக முன் கதவை ஒருவர் உடைத்து உள்ளே சென்று அந்தப் பெண்ணை தாக்கியுள்ளார் என்றால், அவர்கள் இருவருக்கும் ஏதோ ஒரு வகையில் தொடர்பு இருக்க வேண்டும் அல்லவா ?
ஈழத் தமிழர்கள் அதிகம் வாழும், ஹரோ பகுதியில் அதுவும் ஈஸ்ட் காட் அவனியூவில் பல தமிழர்கள் வாழ்கிறார்கள். அந்த இடத்தில் இந்த அசம்பாவிதம் நடந்தது, அருகே உள்ள தமிழர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. பொலிசாரின் அறிக்கையை பெற, காத்திருக்கிறோம். அதுவரை அதிர்வின் செய்திகளோடு இணைந்திருங்கள். Source: https://harrowonline.org/2025/10/23/police-arrest-man-after-two-injured-in-south-harrow-incident/