லண்டன்: 03-11-2025 வீடியோ கீழே இணைப்பு
“சாத்தான் வெல்ல மாட்டான்” … சாத்தான் வெல்ல மாட்டான்…. என்று கத்திக் கொண்டு கையில் கத்தியோடு ஓடி வந்த கறுப்பின நபர் ஒருவர் நடத்திய தாக்குதலில், சுமார் 11 பேர் கயமடைந்துள்ளனர். ரயில் நிலையத்தில் சிறுவர் பெண்கள் என அனைவரும் தமது உயிரைக் காக்க தலை தெறிக்க ஓடிய CCTV- காட்சிகள் நெஞ்சைப் பதறவைக்கிறது.
பிரிட்டனில் என்ன நடக்கிறது என்பது தெரியவில்லை.. சட்டம் ஒழுங்கு இல்லாத ஒரு நாடாக மாறிவிட்டது. ஏற்கனவே பிரித்தானிய வெள்ளை இன மக்கள், வேற்றின மக்கள் தமது நாட்டுக்குள் குடியேறி, தமது நாட்டை நாசம் செய்து விட்டதாக நினைக்க ஆரம்பித்து விட்டார்கள்.
இதனால் நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் அவர்கள், ரீஃபோம் என்னும் 3வது கட்சிக்கு தமது வாக்குகளைப் போட்டுள்ளார்கள். இந்தக் கட்சி தான் வேற்றின மக்கள் பிரிட்டனில் இருந்து வெளியேறவேண்டும் என்றும், பிரித்தானியா ஆங்கிலேயர்களுக்கு சொந்தமான நாடு என்றும் பரப்புரை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு அங்கமாக தான் பிரித்தானிய தெருக்களில், பிரிட்டன் கொடி மற்றும் யூனியன் கொடிகள் ஏற்றப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று (02) ஞாயிறு அன்று, இரவு கேம்பிரிஜ்ஷியர் நகரில் உள்ள ரயில் நிலையத்திற்கு கத்தியோடு வந்த கறுப்பினர் நபர் பலரை சரமாரியாக தாக்கியுள்ளார். நீண்ட போராட்டத்திற்கு பின்னர், பொலிசார் அன் நபரை கைதுசெய்துள்ள நிலையில் இவர் மன நிலை பாதிக்கப்பட்ட நபராக இருக்க கூடும் என்றும் கூறப்படுகிறது. பிற நாடுகளில் உள்ள சைக்கோ கொலையாளிகள், பெரும் குற்றவாளிகள் அவர்கள் நாட்டில் இருந்து தப்பி பிரிட்டன் வந்து குடியேறி வருகிறார்கள். இவர்கள் நாட்டில் இவர்கள் யார் என்று கூட அறியாத பிரித்தானிய அதிகாரிகள் அவர்களை தங்க வைத்து தங்கத் தட்டில் உணவையும் கொடுத்து வருகிறார்கள்.
சிறுமிகளை கற்பழித்த நபர்கள் கூட ஆயிரக் கணக்கில் வந்து பிரிட்டனில் குடியேறியுள்ளார்கள். இவர்களை இனம் காணுவதே பெரும் பாடாக உள்ள நிலையில். இந்தியர்கள், இலங்கையர்கள் பிரித்தானியாவில் குடியேறி அன் நாட்டுக்கு பெரும் அர்பணிப்புகளை செய்து வருகிறார்கள். ஆனால் இவர்கள் போன்ற சிலரால், அனைத்து வேற்றின மக்களையும் வெறுப்புடன் வெள்ளை இன மக்கள் பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் என்பது தான் மிகவும் கவலைக்கிடமான விடையம் ஆகும்.