அதிர்ச்சித் தீர்ப்பில் 11 பேருக்கு ஆயுள் தண்டனை! துருக்கியின் பிரபலமான ஸ்கை ரிசார்ட்டில் ஏற்பட்ட கோரமான தீ விபத்து வழக்கில், விடுதி உரிமையாளர் உட்பட 11 பேருக்கு எதிராகப் பிரதான வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
பலகோடி ரூபாய் மதிப்புள்ள விடுதி தீக்கிரையாகி, பலர் உயிரிழந்த இந்தச் சம்பவத்தில், கடும் அலட்சியம் மற்றும் உயிரிழப்புக்குக் காரணமானவர்கள் எனக் குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கும் ஆயுள் சிறைத் தண்டனை விதித்து துருக்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பயங்கரமான இந்தத் தீ விபத்து துருக்கி முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு இந்தத் தீர்ப்பு சற்று ஆறுதலை அளித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விடுதி உரிமையாளர், அவரது குடும்பத்தினர் மற்றும் முக்கிய அதிகாரிகள் மீது சுமத்தப்பட்ட இந்தக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன.
தீ விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்குப் பொறுப்பேற்க மறுத்த குற்றவாளிகள், இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளனர். இருப்பினும், நீதி மன்றத்தில் தீர்ப்பு வாசிக்கப்பட்ட போது, பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கைதட்டி வரவேற்றது குறிப்பிடத்தக்கது!