பிரித்தானியாவில் சராசரியாக ஒரு வீட்டில் உள்ள நபர், மாதம் தோறும் £15 பவுண்டுகளை TV வைத்திருப்பதற்காக செலுத்த வேண்டி உள்ளது. ஆனால் பல தமிழர்களுக்கு தெரியாது இதனை நாம் கட்டத் தேவை இல்லை என்று. காரணம் , நீங்கள் வைத்திருக்கும் TVல் யூ-ரியூப் மற்றும் BBC சேனல்களை பார்பது இல்லை, மாறாக இந்திய இலங்கை நிகழ்சிகளை தான் பார்கிறீர்கள் என்றால், நீங்கள் TV லைசன்ஸ் பணம் கட்டத் தேவை இல்லை. ஆனால் அதிகார பூர்வமாக , அவர்கள் வெப்சைட் சென்று அதனை அறிவிக்க வேண்டும்.
இது இவ்வாறு இருக்க, அமெரிக்க அதிபர் டொனால் ரம் , பேசிய நிகழ்ச்சி ஒன்றை BBC ஒளிபரப்பும் போது அதனை தமக்கு ஏற்றவாறு வெட்டி ஒட்டி, ஒளிபரப்பியுள்ளது BBC. இதனை கண்டு பிடித்த அதிபர் ரம், தாம் இப்படி பேசவில்லை என்று கூற, உடனே மன்னிப்புக் கோரியது BBC. இதனை அடுத்து இதனை எடிட் செய்த நபர் தொடர்க்கம் BBC தலைமை நிர்வாகி என்று பலர் ராஜினாமா செய்து இருந்தார்கள். இதனால் டொனால் ரம்பை சாந்திப் படுத்த முடியும் என்று அவர்கள் கருதியது பெரும் பின் விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.
BBC யிடம் நஷ்ட ஈடு கோரி, டெனால் ரம் சுமார் 1 பில்லியன் (மில்லியன் அல்ல பில்லியன்) டாலர்கள் கோரியுள்ளார். இவர் லண்டனில் உச்ச நீதிமன்றில் மான நஷ்ட வழக்கு ஒன்றையும் தொடுக்க உள்ளதாக இன்று(16) செய்திகள் வெளியாகியுள்ளது. அதாவது பிரித்தானியாவில் உள்ள 60 மில்லியன் மக்கள், கட்டும் TV லைசன் கட்டணம் ஊடாக , அவர்கள் 3.66 பில்லியன் பவுண்டுகளை ஆண்டு ஒன்றுக்கு வருமாணமாக பெறுகிறார்கள். இவை மக்களின் வரிப் பணம்.
இதில் பெரும் பங்கு BBC நிறுவனத்திற்கு செல்கிறது. இந்த பணத்தை எடுத்து எப்படிச் செலவு செய்வது என்றே தெரியாமல் BBC நிறுவனம் செலவு செய்து வருகிறது என்று தான் கூறவேண்டும். BBCல் வேலை பார்க்கும், நபர்களுக்கு தகுதிக்கு மீறிய சம்பளம். ஒரு மருத்துவரை(Doctor) விட 4 மடங்கு அதிக சம்பளம். அதிகாரிகளுக்கு மில்லியன் கணக்கில் சம்பளம் + போனஸ் , என்று அள்ளி வழங்கி வருகிறது BBC நிறுவனம்.
சொர்க-லோகத்தில் வாழ்வது போல BBC நிறுவன ஊழியர்கள் வாழ்ந்து வருகிறார்கள் என்றால் அது மிகை ஆகாது. தற்போது டொனால் ரம் தொடுக்க உள்ள மான நஷ்ட வழகில். அவர் 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை கோரவுள்ள நிலையில். இந்த வழக்கு அதிபர் ரம்புக்கு சாதகமாகவே செல்லும். ஏன் என்றால் உயிரே போனாலும், பிரித்தானிய நீதிபதிகள் நீதி தவற மாட்டார்கள். நாடே வங்குரோத்தில் செல்லும் என்றாலும் தமது தீர்ப்பை மாற்றப் போவது இல்லை. இதனால் ரம்புக்கு நல்ல பணம் கிடைக்க உள்ளது.
ஆனால் யாருக்கு அடி விழுகிறது ? என்று கேட்டால், சாதாரண உழைக்கும் வர்க்க மக்களுக்கு தான். ஏன் என்றால் ஒரு வேளை ரம் மான நஷ்ட வழக்கில் வென்று பணத்தை பெற்றுக் கொண்டால் , அந்த இழப்பை ஈடு செய்யவேண்டும் அல்லவா ? உடனே TV லைசன் பணத்தை அதிகரிப்பார்கள். தற்போது லண்டன் மேயர் சாதிக் கான் செய்வது போல… லண்டனுக்குள் அதிக கார்கள் வருகிறது. இதனால் லண்டன் மத்திய நகரம் மாசு படுகிறது என்று, Congestion Chargeஐ போட்டார்கள். இதனால் பலர் மின்சார கார்களை வாங்கினார்கள். ஆனால் தற்போது மின்சார கார்களுக்கு Congestion Charge என்று அறிவித்துள்ளார் சாதிக் கான்.
என்ன தாண்டா சொல்ல வாறீங்கள் ? என்று கேட்டு குழம்பி போய் உள்ளார்கள் மக்கள். எதுக்கு எடுத்தாலும் வரி…. இப்படியே மக்கள் உழைக்கும் பணத்தை சுரண்டி மக்களை , ஏமாளி ஆக்கி , பிழைப்பு நடத்தும் அரசு தான் பிரித்தானிய அரசு. உழைத்து வாழும் வர்கம் அப்படியே இருக்கும். ஆனால் சுய தொழில் செய்பவர்கள் மட்டும் மேலும் மேலும் முன்னேறி பணக்காரர்கள் ஆகி விடுவார்கள். இது போலவே DESIGN செய்யப்பட்டுள்ளது பிரித்தானிய அரசியல். மற்றும் அரசு.
டொனால் ரம் தொடுக்க உள்ள வழக்கை நாம் பொறுத்து இருந்து தான் பார்க்கவேண்டும். ஆனால் அவர் தொடுக்க உள்ள வழக்கை பார்த்து ஏற்கனவே பிரித்தானியா மிரண்டு போய் உள்ளது. நாயை அடிப்பான் ஏன் ? பீ…. சுமப்பான் ஏன் என்று ஈழத் தமிழர்கள் கூறுவார்கள். அது எப்படிப் பட்ட உண்மை தெரியுமா ? அதனை இங்கே தான் பார்க முடிகிறது.