Posted in

ஜனநாயகன் அப்டேட்: மலேசிய பிரதமர் “அன்வர்” TVK தலைவர் விஜயை வரவேற்க்க உள்ளார் !

இதுவரை தமிழகத்தில் உள்ள எந்த ஒரு அரசியல் தலைவரையும் சந்திக்காத,  மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் அவர்கள், தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவர் விஜய் அவர்களை மலேசியாவில் வரவேற்க உள்ளார் என்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இந்தியப் பிரதமர் அல்லது குடியரசுத் தலைவரை மட்டுமே சந்தித்து வந்த மலேசியப் பிரதமர், முதல் முறையாக ஒரு இந்திய மாநிலத்தில் உள்ள அரசியல் தலைவரைச் சந்திக்க உள்ளார் என்பது, இந்தியாவை மட்டும் அல்ல, தெற்காசிய அரசியலையே  திரும்பிப் பார்க்கவைத்துள்ளது என்று தான் கூறவேண்டும்.

‘ஜனநாயகன்’ வெளியீட்டு விழா
வரும் டிசம்பர் 27-ஆம் தேதி, விஜய்யின் “ஜனநாயகன்” படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெறுகிறது. உலகில் உள்ள பல தமிழர்கள் மலேசியாவுக்குப் படை எடுக்க ஆரம்பித்துள்ள நிலையில், டிசம்பர் 25 முதல் மலேசியாவுக்குச் செல்லும் அனைத்து விமானச் சீட்டுகளும் நிரம்பி வருவதாக சில விமான சேவைகள் தெரிவித்துள்ளது. இன்டிகோ போன்ற நிறுவனங்கள் கூடுதல் சேவையை மலேசியாவுக்கு அறிவித்தால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இதனை மலேசிய அரசு உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.

இதேவேளை, மலேசியாவில் உள்ள பெரிய மைதானம் ஒன்றில் விஜய் அவர்களின் நிகழ்வு நடக்க உள்ளது. அந்த மைதானத்தில் சுமார் 50,000 முதல் 80,000 மக்கள் கூட வாய்ப்பு உள்ளதால், இது மலேசியாவில் நடக்கும் மிகப் பெரிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

அரச மரியாதையும் பிரதமரின் சந்திப்பும்
இவை அனைத்தையும் கருத்தில் கொண்ட மலேசிய அரசு, TVK தலைவர் விஜய் அவர்களை விமான நிலையத்தில் மரியாதையாக வரவேற்று, அரச மரியாதை மற்றும் அரசப் பாதுகாப்போடு அவர் தங்கும் ஹோட்டலுக்குக் கொண்டு செல்கிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை, மலேசியப் பிரதமரே விஜய்யைச் சந்தித்து, அவரை மலேசியாவுக்கு வரவேற்க உள்ளார் என்ற தகவலும் கூடவே வெளியாகியுள்ளது. இது ஒரு தமிழருக்குக் கிடைக்கும் அதி உச்ச கௌரவம் ஆகும். அதனை விஜய் பெறுகிறார் என்பது பெரிய விஷயம். இதுவரை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு இது கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்க விஷயம். எனவே, TVK தலைவர் விஜய் அவர்கள் ஒரு சர்வதேச அரங்கில் பெரும் தலைவராக உருப்பெற்று வருகிறார். மலேசிய பிரதமரும் ஒன்றும் சும்மா விஜயை சந்திக்கவில்லை. அவர் விஜயை சந்திப்பதன் மூலம் மலேசியா வாழ் லட்சக் கணக்கான தமிழர்களின் வாக்குகளை வரவுள்ள மலேசிய தேர்தலில் கைப்பற்றுவார் இல்லையா ?