அமெரிக்காவின் அதிகார மையமான வெள்ளை மாளிகையின் கிழக்குச் சபை (East Wing) இடிக்கப்பட்ட விவகாரத்தில், நிர்வாகமும் ஒப்பந்ததாரர்களும் ‘ஆஸ்பெஸ்டாஸ் (Asbestos)’ பாதுகாப்பு விதிகளை வேண்டுமென்றே மீறினார்களா என்ற கேள்வியை எதிர்க்கட்சிகளும் சுகாதார ஆர்வலர்களும் எழுப்பியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!
பழைமையான இந்தக் கட்டிடத்தின் இடிப்புப் பணிகள் மிக வேகமாக நடந்த நிலையில், சுற்றுச்சூழல் மற்றும் தொழிலாளர் பாதுகாப்பு விதிகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை என விமர்சகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கிழக்குச் சபை 1940களில் விரிவுபடுத்தப்பட்டபோது, கட்டுமானப் பணிகளில் ஆஸ்பெஸ்டாஸ் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது. இந்த நச்சுப் பொருளின் நுண்துகள்கள் காற்றில் கலக்கும்போது, அது புற்றுநோய் (Mesothelioma) உள்ளிட்ட தீவிர சுவாச நோய்களை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
இடிப்புப் பணிகளைத் தொடங்குவதற்கு முன், கட்டாய ஆஸ்பெஸ்டாஸ் ஆய்வு மற்றும் பாதுகாப்பான அகற்றும் நடைமுறைகள் (Abatement) முறையாகப் பின்பற்றப்படவில்லை என்று எதிர்க்கட்சியின் செனட்டர்கள் மற்றும் பொது சுகாதாரக் குழுக்கள் (ADAO) குற்றம் சாட்டுகின்றன.
இடிப்பு ஒப்பந்ததாரரான ACECO மற்றும் வெள்ளை மாளிகை நிர்வாகம் ஆகியவை, ஆஸ்பெஸ்டாஸ் அபாயம் குறித்த அதிகாரப்பூர்வ ஆய்வு அறிக்கைகள் அல்லது பாதுகாப்புச் சான்றிதழ்களை பொதுமக்களுக்கு வெளியிட மறுத்ததே இந்தச் சந்தேகங்களுக்கு முக்கியக் காரணம்.
“தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களின் சுகாதாரப் பாதுகாப்பை விட, இடிப்பு வேகத்துக்கு நிர்வாகம் முன்னுரிமை கொடுத்ததா? விதிகள் ‘சுருக்கப்பட்டு’ பணியை முடிக்க அவசரப்படுத்தப்பட்டதா?”
வெளியான இடிப்பு வீடியோக்களில், கட்டிடத்திலிருந்து பயங்கரமான தூசிக் மேகங்கள் கிளம்பியதுடன், சில தொழிலாளர்கள் முழுமையான தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் (PPE) அணியாமல் இருந்ததாகவும் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இது, ஆஸ்பெஸ்டாஸ் பாதுகாப்புப்protocols மீறப்பட்டதற்கான காட்சி ஆதாரமாகப் பார்க்கப்படுகிறது.