“பில்லா”படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆடியது யுவராஜ் சிங் மனைவியா…. ஷாக்கிங் தகவல்!

“பில்லா”படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆடியது யுவராஜ் சிங் மனைவியா…. ஷாக்கிங் தகவல்!

அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் பில்லா. இத்திரைப்படத்தில் அஜித், நமிதா, நயன்தாரா , பிரபு உள்ளிட்டோர் ஒரு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள் . இத்திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி திரைப்படமாக அஜித்தின் கெரியரில் மிக முக்கிய படமாக அமைந்தது.

ரூ. 18 கோடி செலவில் உருவாகிய திரைப்படம் ரூ. 64 கோடி வசூலிட்டி மாபெரும் சாதனை படைத்த படமாகவும் வசூல் ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்ற படமாகவும் முத்திரை பதித்தது. விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளிவந்த இந்த படத்தின் சுவாரசியமான தகவல் ஒன்று தற்போது கிடைத்துள்ளது.

அதாவது இத்திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த ஐட்டம் சாங் ஒன்றில் ஆட்டம் போட்டது பிரபல கிரிக்கெட் வீரரான யுவராஜ் சிங்கின் மனைவி என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஆம், மாடலிங் துறையில் இருந்து நடிகையாக அறிமுகமாகி பல்வேறு ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் தான் ஹேசல் கீச். இவர் ஹாரி பாட்டர் படத்தில் கூட முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார் .

அப்படித்தான் ஹாலிவுட்டில் பிரபலமாகி கொண்டிருந்த அவரை விஷ்ணுவர்தன் அஜித்தின் பில்லா படத்தில் ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போட வைத்து நடிக்க வைத்திருக்கிறார். 2016ல் பிரபல கிரிக்கெட் வீரர் ஆன யுவராஜ் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள் . அவர்களின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாக பில்லா படத்தில் நடித்தது யுவராஜ் சிங் மனைவியா? என கோலிவுட் ரசிகர்கள் செம ஷாக்காகி வருகிறார்கள். இந்த வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.