Posted in

உதயநிதி மீதும் ஊழல் குற்றம் பாயும் என்று நேரடியாக கூறிய விஜய்- பெரும் அமளி !

ஒரு சினிமா படத்துல நம்ம கவுண்டமணி சார் சொல்ற மாதிரி, “சும்மா போயிட்டு இருந்தவனுக்கு மோட்டார் பைக்கைக் கொடுத்து ஓட வச்சிருக்காங்கப்பா” என்ற பாணியில், நம்ம உதயநிதி ஸ்டாலினுக்குக் குடையும் குஞ்சமும் கொடுத்து, கடைசியில் அந்த சொந்தக் குடையாலேயே அடி வாங்க வச்ச கதையாகிடுச்சு பாஸ்! சிவனேன்னு அசம்பிளில அமைதியாக இருந்த நம்ம தளபதி விஜயைப் பார்த்து, “தைரியம் இருந்தா முதல்வர் பேசணும்” அப்படின்னு பாக்கெட் சைஸ்ல பேனரைக் காட்டி வம்பு இழுத்ததே இந்த திமுக காரங்கதான்.

ஆனா சீன் அப்படியே தலைகீழா மாறிடுச்சு! “தம்பிங்க ஆசைப்பட்டு கூப்பிட்டாங்க, நாம போய்த்தான் பார்ப்போமே”ன்னு நம்ம சிஎம் விஜய் மைக் பிடிச்சு பேச ஆரம்பிச்ச உடனே, அதைக் கேட்கக்கூட முடியாம பயந்துபோய், எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதி டக்குன்னு சீட்டை விட்டு எழுந்து சபையை விட்டே அப்ஸ்காண்ட் ஆயிட்டாரு. இன்னைக்குச் சட்டசபையில முதல்வர் விஜய் ஆடிய ஆட்டம் சும்மா அதிரடி ருத்ரதாண்டவம்! இதுவரைக்கும் திமுகவும் மத்தவங்களும் அவர் மேல வீசிய அத்தனை குற்றச்சாட்டுகளுக்கும், இன்னைக்கு மொத்தமாகச் சேர்த்து வச்சு தரமான செய்கை செஞ்சுட்டாரு நம்ம தளபதி.

விஷயம் என்னன்னா, டாஸ்மாக்ல (TASMAC) பல கோடி ரூபாய் நிதியை அமுக்கிட்டு, அதை அப்படியே ‘கட்சி நிதி’ன்னு கணக்குக் காட்டி அமுக்கியிருக்கு முந்தைய திமுக அரசு. இது தொடர்பான ஒரு வெயிட்டான, பக்கா ஆதாரம் தவெக (TVK) கைல சிக்கியிருக்காம். இதைப் பார்த்த உடனே நம்ம சிஎம் விஜய், “உடனே இறங்கி செஞ்சு, உரிய விசாரணை நடத்துங்கப்பா”ன்னு போலீசுக்கு அதிரடி உத்தரவு போட்டிருக்காரு. இதனால திமுகவோட பல முக்கியப் புள்ளிகள் சீக்கிரமே கம்பி எண்ணப் போறாங்கன்னு டாக் ஓடுது; அதுலயும் நம்ம சேகர் பாபுவோட பார்ட்னரான உதயநிதியும் இந்த மேட்டர்ல பலமாகச் சிக்கியிருக்காராம்.

விசாரணை இனிமேல் வேற லெவல்ல சூடு பிடிக்கப் போகுது. “ஊழல் செஞ்சவன் எவனா இருந்தாலும் விடமாட்டேன், மாப்ள” அப்படின்னு உதயநிதியை நேருக்கு நேராகப் பார்த்து விஜய் செம்ம மாஸாக, சத்தமாகத் தெரிவிச்சிருக்காரு. இதைக் கேட்டதும் சபையில ஒரே ரகளையாகி, எதிர்க்கட்சிக்காரங்க பயங்கரமா கொந்தளிச்சிட்டாங்க. நம்ம விஜய் சும்மா கெத்து காட்டுறதுக்காக இப்படிப் பேசுற ஆள் கிடையாது; சரியான பக்கா ‘ப்ரூஃப்’ இல்லாமல் அவர் இப்படிப் பேசியிருக்க சான்ஸே இல்லை. மொத்தத்துல, “முதல்வன்” படத்துல வர்ற ரகுவரன் மாதிரி, திமுக தலைவர் இப்போ ஜெயிலுக்குப் போக நிறைய வாய்ப்பு இருக்கு பாஸ்!