Posted in

லண்டனில் 19 வயது பெண்ணுக்கு போதை பொருள் கொடுத்து சீரழித்த இலங்கை தமிழ் இளைஞர்

லண்டனில் 19 வயது பெண்ணுக்கு போதை பொருள் கொடுத்து சீரழித்த இலங்கை தமிழ் இளைஞர் - Image 1

படிப்பிற்காகவும், பிழைப்பிற்காகவும் லண்டன் செல்லும் இளைஞர்களுக்கு மத்தியில், ஒரு தமிழ் இளைஞனின் கீழ்த்தரமான செயல் சவுதாம்ப்டன் (Southampton) நகரையே அதிர வைத்துள்ளது. 21 வயதான வியான் சுரேந்திரநாதன் (Viaan Surendranathan) என்ற இலங்கை தமிழ் இளைஞர், 19 வயது இளம் பெண் ஒருவருக்கு மிக வீரியமான ‘கிளாஸ் ஏ’ (Class A) வகை போதைப்பொருளைக் கொடுத்து, அவரைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். கடந்த பிப்ரவரி 5-ம் தேதி, சவுதாம்ப்டனின் பாலிகன் (Polygon) பகுதியில் உள்ள ஒரு ரகசிய இடத்தில் இந்த நரக வேதனை அரங்கேறியுள்ளது. பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண் மயக்க நிலையில் இருந்து மீண்ட பிறகு கொடுத்த புகாரால், இப்போது இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்திய சவுதாம்ப்டன் போலீசார், வியான் சுரேந்திரநாதனை அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர் மீது பாலியல் வன்கொடுமை (Rape), பாலியல் செயல்பாட்டிற்காக சட்டவிரோதமாகப் போதைப்பொருள் வழங்கியது மற்றும் உயிரைப் பறிக்கக்கூடிய ஆபத்தான ‘Class A’ ரக போதைப்பொருட்களைப் பதுக்கி வைத்திருந்தது எனப் பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. “பாதிக்கப்பட்ட அந்தப் பெண் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை, அவருக்குத் தேவையான மனநல ஆலோசனைகளையும் பாதுகாப்பையும் வழங்கி வருகிறோம்” என்று காவல்துறை செய்தித் தொடர்பாளர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

கண்ணிமைக்கும் நேரத்தில் ஒரு பெண்ணின் வாழ்க்கையைச் சீரழித்த இந்த “காமக் கொடூரனை” நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் அனைத்து ஆதாரங்களையும் திரட்டியுள்ளனர். 2026-ல் வெளிநாடுகளில் வாழும் தமிழ் இளைஞர்கள் போதைப்பொருள் கலாச்சாரத்திற்கு அடிமையாகி, இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வியான் சுரேந்திரநாதனுக்கு நீதிமன்றம் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. அந்நிய தேசத்தில் தமிழரின் மானத்தைக் கப்பலேற்றிய இந்தச் சம்பவம் குறித்த மேலதிக விபரங்கள் விரைவில் வெளியாகவுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *