Posted in

ஒவ்வொரு வீட்டிலும் ஒரு தவெக ஆதரவாளர்: 2.8 கோடி பேரை தொட்ட TVK

ஒவ்வொரு வீட்டிலும் ஒரு தவெக ஆதரவாளர்: 2.8 கோடி பேரை தொட்ட TVK - Image 1

நேற்று முன் தினம்(13) அன்று வெளியான ஒரு அறிக்கையின் அடிப்படையில், தமிழக வெற்றிக் கழகம் சில வாரங்களில் தனது , செல்வாக்கை பன் மடங்காகப் பெருக்கியுள்ளது தெரியவந்துள்ளது. சுமார் 2.8 கோடி பேர் தற்போது TVK க்கு ஆதரவாக வாக்களிக்க உள்ளதாகவும், கூறப்படுகிறது. இதே நிலை நீடித்தால் தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் செல்வாக்கு கூடும் என்று கூறப்படுகிறது. 

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ஐ இலக்காகக் கொண்டு, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் மாநிலம் முழுவதும் அதிவேகமாகத் தனது கால்தடத்தைப் பதித்து வருகிறது. சமீபத்திய தரவுகளின்படி, தமிழகத்தில் உள்ள சுமார் 2.28 கோடி குடும்ப அட்டைதாரர்களையும் சென்றடையும் வகையில் ஒரு பிரம்மாண்டமான வியூகத்தை அக்கட்சி வகுத்துள்ளது. ஒவ்வொரு ரேஷன் கார்டுக்குப் பின்னாலும் இருக்கும் ஒரு குடும்பத்தில், குறைந்தபட்சம் ஒருவரையாவது கட்சியின் உறுப்பினராகவோ அல்லது ஆதரவாளராகவோ மாற்ற வேண்டும் என்பதே விஜய்யின் முதன்மை இலக்காக உள்ளது.

தற்போது தவெக கட்சியின் உறுப்பினர் சேர்க்கை 1.5 கோடியைக் கடந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக பூத் வாரியாக 70,000-க்கும் மேற்பட்ட ஏஜென்ட்டுகளை நியமிக்கவும், கட்சியின் கட்டமைப்பை அடிமட்டம் வரை பலப்படுத்தவும் கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்களைக் கவரும் வகையில் டிஜிட்டல் உறுப்பினர் சேர்க்கை மற்றும் சமூக ஊடகப் பிரச்சாரங்களை அக்கட்சி தீவிரப்படுத்தியுள்ளது. 2026 தேர்தலில் 30 சதவீத வாக்கு வங்கியைப் பெறுவதே தங்களின் இலக்கு என அக்கட்சியின் உள்வட்டார ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அரசியல் களத்தில் ‘விசில்’ சின்னத்தைப் பெற்றுள்ள தவெக, திராவிட மற்றும் தேசியக் கட்சிகளுக்கு மாற்றாகத் தன்னை முன்னிறுத்தி வருகிறது. சமீபத்தில் சேலத்தில் நடைபெற்ற கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய விஜய், ஊழலற்ற மற்றும் வெளிப்படையான நிர்வாகத்தை வழங்குவதாக உறுதியளித்தார். 2026-ல் ஒரு மாபெரும் அரசியல் மாற்றத்தை மக்கள் நிகழ்த்துவார்கள் என்றும், அதில் தவெக முக்கியப் பங்காற்றும் என்றும் அவர் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், ஆளும் திமுக மற்றும் எதிர்க்கட்சியான அதிமுக ஆகியவை தங்களின் வாக்கு வங்கியைத் தக்கவைத்துக் கொள்ளப் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகின்றன. குறிப்பாக மகளிருக்கான உரிமைத் தொகை உயர்வு போன்ற அறிவிப்புகள் தேர்தல் களத்தைச் சூடாக்கியுள்ளன. இத்தகைய சவால்களுக்கு இடையே, 2.28 கோடி குடும்பங்களை நேரடியாகச் சென்றடையும் விஜய்யின் இந்த ‘ரேஷன் கார்டு கணக்கு’ மற்ற அரசியல் கட்சிகளிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *