கடந்த ஆண்டு தவெக மாநாட்டுப் பொதுக்கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த கரூர் துயரச் சம்பவம் தொடர்பாகத் தற்போதைய முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் ஆற்றிய உரை, தமிழக அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. முதலமைச்சரின் விமர்சனத்திற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, “பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்காமல் தனி விமானம் பிடித்து ஓடியது யார் என்று கரூர் மக்களுக்குத் தெரியும்” என திமுக முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். செந்தில் பாலாஜியின் இந்த விமர்சனத்திற்கு எதிராகத் தற்போதைய தவெக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை (IT) அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் தற்பொழுது எரிமலையாக வெடித்து, அடுக்கடுக்கான பகீர் கேள்விகளை முன்வைத்துள்ளார்.
செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், “முதலமைச்சர் விஜய் கரூருக்கு நேரில் சென்று மக்களைச் சந்தித்ததைத் தாங்கிக் கொள்ள முடியாமல், திமுகவினர் சம்பந்தமில்லாத விஷயங்களைப் பேசி வருகிறார்கள். அன்று கரூரில் விபத்து நடந்த போது, இரவு 8:05 மணிக்குத் தான் அங்கு என்ன நடந்தது என்றே எங்களுக்கும், அங்கிருந்த மாவட்ட எஸ்பி (SP)-க்குமே தெரியவந்தது. ஆனால், விபத்து நடந்த 5 நிமிடத்திற்குள்ளாகவே செந்தில் பாலாஜி எப்படி நேரலை (Live) கேமராக்களுடன் அரசு மருத்துவமனைக்குச் சென்றார்? அவர் என்ன விபத்து நடக்கும் என மருத்துவமனை பக்கத்திலேயே காத்துக் கொண்டிருந்தாரா?” என்று மிகக் காரசாரமாகக் கேள்வி எழுப்பினார்.
மேலும், அன்றைய தினம் இரவு 12 மணிக்கு அப்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கரூருக்கு வர வேண்டிய அவசியம் என்ன என்றும், அதற்கு முந்தைய 5 ஆண்டுகளில் அவர் தனது சொந்த வீட்டு விவகாரங்களைத் தவிர வேறு எதற்காவது இப்படி அவசரமாக நள்ளிரவில் கிளம்பி இருக்கிறாரா என்றும் அமைச்சர் நிர்மல்குமார் சாடினார். “அரை மணி நேரத்திற்குள் எப்படி உங்களால் தனி விமானத்தை (Charter Flight) தயார் செய்து வைக்க முடிந்தது? ஒரே இரவில் 40 பேரின் உடல்களையும் உடற்கூறாய்வு (Post-mortem) செய்ய குறைந்தது 30 முதல் 40 மருத்துவர்கள் தேவையே, அவர்களை உடனே எங்கிருந்து வரவழைத்தீர்கள்? எங்களின் தவெக தொண்டர்களை மருத்துவமனைக்குள் விடாமல் அடித்து விரட்டியது யார்? ஆதாரங்களை அழிக்கவே அவசர அவசரமாக உடல்கள் அனைத்தும் இரவோடு இரவாகத் தகனம் செய்யப்பட்டன” என்று அடுக்கடுக்கான சதித் திட்டக் குற்றச்சாட்டுகளைப் பட்டியலிட்டார்.
தொடர்ந்து செந்தில் பாலாஜியின் அரசியல் தகுதியை விமர்சித்த அமைச்சர், “அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் கைது செய்ய வந்தபோது, அரசு மருத்துவமனைக் கட்டிலுக்குக் கீழே ஒழிந்து கொண்டு, கட்டில் காலைப் பிடித்துக்கொண்டு ‘என்னை விட்டுவிடுங்கள்’ என்று அழுது கதறியவர் தான் இந்த செந்தில் பாலாஜி. ஊரை ஏமாற்றிப் பணம் பறிக்கத் தெரிந்த இவருக்குத் தவெக அரசை விமர்சிக்க எந்தத் தகுதியும் இல்லை. தற்பொழுது கூட தவெக எம்.எல்.ஏ-க்களைக் குதிரை பேரம் பேசி, ஆட்சியை கவிழ்க்க முயன்ற வழக்கில் இவருக்குத் தொடர்புடைய நபர்களிடம் 50 லட்சம் ரூபாய் ஹவாலா பணம் பிடிபட்டுள்ளது” என்றும் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் அதிரடியாகக் குற்றம் சாட்டியுள்ளார். கரூர்ப் விபத்தின் பின்னணியில் இருந்த மருத்துவமனை நாடகங்களை தவெக அமைச்சர் தற்பொழுது அம்பலப்படுத்தியிருப்பது திமுக வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Автосервис Тойота в Москве предлагает широкий спектр услуг. Специалисты готовы осуществлять ремонт и обслуживание ваших автомобилей.
Если вам нужен качественный и надежный автосервис Toyota в Москве, мы предлагаем широкий спектр услуг для вашего автомобиля.
Ремонт и обслуживание Тойота требуют от специалистов глубоких знаний. Мастера сервиса постоянно повышают свою квалификацию для качественного обслуживания.
Техническое оснащение сервиса соответствует самым высоким стандартам. Благодаря этому, мы можем гарантировать качество выполняемых работ.
Вы получите качественное и профессиональное обслуживание вашего автомобиля. Ваше доверие для нас — наивысшая награда.