நேற்றைய தினம் சென்னையில் உள்ள சமூக நீதி மாணவர் விடுதியை திடீரென பார்வையிட்டார் முதல்வர் விஜய். இந்த விடயம், வாகனத்தை ஓட்டிச் சென்ற சாரதிகள் தொடக்கம் பாதுகாப்பு அதிகாரிகள் வரை யாருக்குமே தெரியாது என்பது பெரும் ஆச்சரியம். இதனால் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் ஏனைய அதிகாரிகள் எவருக்கும் “எங்கே செல்கிறோம்?” என்று கூட சொல்லாமல் விஜய் சென்றதால், எந்த ஒரு முன் அறிவிப்பும் வழங்கப்படவில்லை. இதேவேளை, சமூக நீதி அமைச்சர் வன்னி அரசுக்கு 10 நிமிடங்களுக்கு முன்னரே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனால், அறக்கப் பறக்க ஓடி வந்த வன்னி அரசு, அங்கு செல்வதற்கு முன்னரே விஜய் அந்த விடுதிக்குள் சென்றுவிட்டார். மாணவர்கள் அனைவரும் கூறிய புகார்களை மிகவும் சாவகாசமாக கேட்டுக் கொண்ட விஜய், அவை அனைத்தையும் உடனடியாக செயல்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தரமான உணவு வழங்க வேண்டும், மூடிக் கிடக்கும் விளையாட்டு மைதானத்தை திறக்க வேண்டும், கொசுத் தொல்லைக்கு தீர்வு காண வேண்டும், இரவு வேலை செய்து விட்டு வரும் மாணவர்களை உள்ளே அனுமதிக்க வேண்டும், அவர்களை அசிங்கமாக திட்டக் கூடாது என்று பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
இது இவ்வாறு இருக்க, தனது பிரத்தியேக நம்பரை ஒரு மாணவரிடம் கொடுத்து, “அடுத்த 30 நாட்களில் இவை அனைத்தும் சீராகவில்லை என்றால் இந்த நம்பருக்கு கால் செய்யுங்கள். அடுத்த 15 நிமிடங்களில் நான் மீண்டும் இங்கே வருவேன்” என்று கூறிச் சென்றுள்ளார். இந்த விடயம், அந்த விடுதியை நடத்தும் அதிகாரிகளின் வயிற்றில் புளியைக் கரைப்பது போல அமைந்துள்ளது.
அடுத்து அமைச்சர் வன்னி அரசு பற்றி பார்ப்போம். விசிக கட்சி தவெகவுக்கு ஆதரவு கொடுத்ததால் மட்டுமே, அக்கட்சியைச் சேர்ந்த வன்னி அரசை சமூக நீதித் துறை அமைச்சராக விஜய் நியமித்தார். ஆனால் வன்னி அரசு அமைச்சர் என்ற பந்தாவில் மிகவும் ஜாலியாக சுற்றித் திரிகிறார்.
அவர் தனது துறையை சரியாக கவனிப்பதில்லை என்ற புகார் விஜயின் காதுக்கு சென்றதாக கூறப்படுகிறது. வன்னி அரசு தவெக உறுப்பினர் அல்ல என்பதால், அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவது எளிதான விடயம் அல்ல. ஆனால் அவருக்கு ஒரு சரியான பாடம் புகட்ட வேண்டும் என்று கருதிய விஜய், கையில் எடுத்த ஆயுதம்தான் இந்த திடீர் ஆய்வு. இதன் மூலம் வன்னி அரசுக்கு, “உங்கள் துறையை நீங்கள் கவனிக்க வேண்டும்” என்ற செய்தியை விஜய் சொல்லாமல் சொல்லியிருக்கிறார். உங்கள் துறையில் பல குறைகள் இருக்கின்றன, அவற்றை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும் என்பதே அதன் நோக்கமாகும்.
நேற்று நடந்த இந்த சம்பவத்தால் அனைத்து அமைச்சர்களும், எந்த நேரத்திலும் விஜய் தனது துறை சார்ந்த இடங்களுக்கு திடீரென வரக்கூடும் என்பதால், கால் பம்பரத்தை கட்டிக் கொண்டு களத்தில் இறங்கியுள்ளனர். அனைத்து அமைச்சர்களும் இவ்வாறு செயல்படத் தொடங்கினால், அரசுப் பணிகள் விரைவாகவும் சரியாகவும் நடைபெறும் என்பதில் எந்த ஒரு ஐயமும் இல்லை.
விஜய் போன்ற ஒரு முதல்வரை தமிழகம் இதுவரை கண்டதில்லை; அவர் சென்ற பிறகும் அவரைப் போன்ற ஒருவர் வருவாரா என்பது குறித்து பல்வேறு கருத்துகள் உள்ளன.
இதுவே தமிழகத்தின் பொன்னான காலமாக அமையலாம் என்று அவரது ஆதரவாளர்கள் கருதுகின்றனர். இது போன்ற ஒரு முதல்வரை நாம் இழந்து விடக் கூடாது என்றும், இன்னும் 10 ஆண்டுகளில் தமிழகம் ஒரு குட்டி சிங்கப்பூராக மாறும் என்ற நம்பிக்கை மக்களின் ஒரு பகுதியினரிடம் துளிர்க்க ஆரம்பித்துள்ளது.