Posted in

அஜித் பவார் இறந்த விமானத்தின் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன இதோ ATC-Report

அஜித் பவார் இறந்த விமானத்தின் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன இதோ ATC-Report - Image 1

 மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவர், இறப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் விமானத்தில் என்ன நடந்தது என்ற துல்லிய அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. கட்டுப்பாட்டு அறைக்கும் விமானத்திற்கும் இடையே கடைசில் நிமிடங்களில் நடந்த தொடர்பாடலை வைத்துப் பார்த்தால், விமானி ஓடுபாதையை சரியாக கணிக்காமல் சட்டென விமானத்தை தரை இறக்கியதால் இந்த விபத்து நேர்த்திருக்க கூடும் என்று சொல்லப்படுகிறது. 

புனே (கிராமப்புறம்) இன்று (புதன்கிழமை) காலை 8.40 மணிக்கு  இந்த தனியார் விமானம் தரையிறங்குவதற்கு முன்பு விமானம் விபத்துக்குள்ளானது, அதில் ஐந்து பேர் இருந்தனர்.” என்றார் எஸ்பி சந்தீப் சிங். ‘தரையிறங்கும் போது ஏதோ பிரச்னை தெரிந்தது, விமானம் விபத்துக்குள்ளாகலாம் என்று தோன்றியது’ என்று நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். விமானம் பாராமதியில் தரையிறங்குவதற்கு முன்பு விமானிக்கும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்புக்கும் இடையிலான உரையாடலை இங்கே தருகிறோம். 

  • விமான போக்குவரத்து கட்டுப்பாட்டை (ATC) கையாண்ட நபர் அளித்த தகவல்களின்படி, ஜனவரி 28, 2026 அன்று, விமானம் VI-SSK காலை 8:18 மணிக்கு பாராமதியுடன் முதல் தொடர்பை ஏற்படுத்தியது.
  • பின்னர் விமானம் பாராமதிக்கு 30 கடல் மைல்களுக்கு முன்பு ஒரு அழைப்பை மேற்கொண்டது, அங்கு அது புனேவில் தரையிறங்குவதற்கான நடைமுறைகளிலிருந்து விடுவிக்கப்பட்டது.
  • வானிலையை பொறுத்து அவருடைய சொந்த கணிப்பின்படி தரையிறங்க அதன் விமானி அறிவுறுத்தப்பட்டார்.
  • காற்று மற்றும் தெரிவுநிலை (visibility) குறித்து விமான குழுவினர் விசாரித்தனர். காற்று சீராக இருப்பதாகவும், தெரிவுநிலை சுமார் 3,000 மீட்டர் என்றும் அவர்களிடம் கூறப்பட்டது.
  • பின்னர் விமானம் ஓடுபாதை 11-ல் தரையிறங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக குழுவினர் கூறினர். ஆனால், குழுவினரால் ஓடுபாதையைப் பார்க்க முடியாததால், அவர்கள் தங்கள் முதல் முயற்சியில் தரையிறங்கும் முடிவை கைவிட்டு திரும்பிச் சென்றனர்.
    • அதன்பின், விமானத்தின் நிலை குறித்து குழுவினரிடம் கேட்கப்பட்டது. பின்னர் விமானக் குழுவினர் ஓடுபாதை 11-ல் தரையிறங்குவதற்கான நடவடிக்கைகளில் இருப்பதாகத் தெரிவித்தனர்.
    • ஓடுபாதையை எப்போது பார்க்க முடியும் என அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு, “ஓடுபாதை தற்போது தெரியவில்லை. அது தெரியும்போது அழைப்பதாக” பதிலளித்துள்ளனர்.
    • சில வினாடிகளுக்குப் பிறகு, ஓடுபாதை தெரிவதாக குழுவினர் கூறியுள்ளனர்.
    • காலை 8:43 மணிக்கு, விமானம் ஓடுபாதை 11-ல் தரையிறங்க அனுமதி அளிக்கப்பட்டது, ஆனால் தரையிறங்கும் அனுமதி குறித்து விமானக் குழுவினரால் எந்த உறுதியும் வழங்கப்படவில்லை.
    • பின்னர், காலை 8:44 மணிக்கு, ஓடுபாதை 11-க்கு அருகில் தீப்பிழம்புகள் எழுவதை ATC கவனித்தது. பின்னர் அவசர சேவைகள் சம்பவ இடத்திற்கு வந்தன.
    • விமானத்தின் சிதைந்த பாகங்கள் ஓடுபாதை 11-க்கு அருகில் இடது பக்கத்தில் காணப்பட்டன.
    • எனவே கால நிலை காரணமாக, தரைக்கும்(ஓடு பாதைக்கும்) விமானத்திற்குமான தூரத்தை சரியாக கணிக்க முடியவில்லை. இதனால் அதி வேகமாக தரையிறங்கிய விமானம் சட்டெனெ நிலை குலைந்து வெடித்து பற்றி எரிந்துள்ளது. 
    • அஜித் பவார் இறந்த விமானத்தின் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன இதோ ATC-Report - Image 2


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *