Posted in

தமிழகத்தில் நாளை மின்தடை: பல்வேறு மாவட்டங்களில் மின் விநியோகம் நிறுத்தம் – முழு விவரம்

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் மின்தடைகள் அறிவிக்கப்பட்டுள்து. அதன்படி, கரூரில் சஞ்சய் நகர் மற்றும் ஆண்டன்கோயில் பகுதியிலும், நாகப்பட்டினத்தில் தேவூர், வேளாங்கண்ணி மற்றும் நாகூர் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் நாளை மின் தடை செய்யப்படுகிறது. மேலும், பெரம்பலூர் மாவட்டம் செந்துறை மற்றும் கல்லங்குறிச்சி பகுதிகளிலும், புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தின் பல முக்கிய இடங்களிலும் மின் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.

உடுமலைப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட அரக்கோணம், வளர்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நாளை காலை முதல் மாலை வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பராமரிப்புப் பணிகள் நடக்கும் காலக்கட்டங்களில் பொதுமக்கள் அவசியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மின்வாரியத் துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

வழக்கமான மாதாந்திரப் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்தவுடன், திட்டமிடப்பட்ட நேரத்திற்கு முன்பாகவே மின் விநியோகம் சீரமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மின் தடை செய்யப்படும் குறிப்பிட்ட ஏரியாக்கள் மற்றும் ஊர்களின் பொதுமக்கள் இதற்கேற்பத் தங்களது தேவைகளை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.