Posted in

நாட்டிங்காம் நகரில் துப்பாக்கிச் சூடு: கால் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காவலர்

இங்கிலாந்தின் நாட்டிங்காம் நகர மையப் பகுதியில் உள்ள ஏஞ்சல் ரோ பகுதியில் (Angel Row) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஆண் காவலர் ஒருவர், அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த இரு நபர்களை அணுகியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காலில் காயமடைந்த அவர், உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் ஒரு தீப்பிடிக்காத துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளதாகக் காவல் துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிய ஒரு ஆணும் பெண்ணும் அடங்கிய இரு சந்தேக நபர்களைப் பிடிக்க அப்பகுதியில் தீவிரமான தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டுள்ளதாக நாட்டிங்காம்ஷைர் காவல் துறை தெரிவித்துள்ளது. பொதுமக்களைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபடும் காவலர்கள் மீது இது போன்ற வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகக் காவல் துறை கூட்டமைப்பு அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

காயமடைந்த காவலர் தற்போது மருத்துவமனையில் தொடர் சிகிச்ச பெற்று வருவதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த பொதுமக்கள் எவரேனும் இருந்தால் உடனடியாகக் காவல் துறையைத் தொடர்பு கொண்டு உதவலாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

நகரின் மையப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுப் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விரிவான தடயவியல் சோதனைகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.