Posted in

வெள்ளை மாளிகை புதுப்பிப்பு பணிகளை விமர்சித்த பராக் ஒபாமா: டொனால்ட் ட்ரம்ப் மீது நகைச்சுவை தாக்குதல்!

அமெரிக்க இடைக்காலத் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய பராக் ஒபாமா, அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகையை மாற்றி அமைப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் என்று குறிப்பிட்டார். வெள்ளை மாளிகையை விடப் பெரிய பால்ரூம் கட்டுவது, ரோஜாத் தோட்டத்தைச் சிமெண்ட் தளமாக மாற்றுவது மற்றும் எங்கு பார்த்தாலும் தங்கத்தை அலங்காரமாகப் பயன்படுத்துவது என ட்ரம்ப் மாற்றங்களைச் செய்து வருவதாக ஒபாமா கேலி செய்தார். சப்ளையர்களின் அலங்காரப் பாணியைக் குறிப்பிடும் வகையில், சதாம் ஹுசைன் ஒரு ‘சீஸ்கேக் பேக்டரி’ உணவகத்தைத் திறந்தது போல் வெள்ளை மாளிகை காட்சியளிப்பதாக ஒபாமா நகைச்சுவையாகக் கூறினார்.

இடைக்காலத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களான மிச்சிகன் மேலவை வேட்பாளர் அப்துல் எல்-சயீத் மற்றும் ஓஹியோ ஆளுநர் வேட்பாளர் ஏமி ஆக்டன் ஆகியோருக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்த ஒபாமா, குடியரசுக் கட்சியினரின் விமர்சனங்களுக்கும் பதிலளித்தார். அப்துல் எல்-சயீத்தின் மதம் மற்றும் பெயரை வைத்து நடத்தப்படும் தாக்குதல்களைக் கண்டித்த ஒபாமா, இதுபோன்ற வெறுப்புப் பிரச்சாரங்கள் மிச்சிகன் மக்களிடம் பலிக்காது என்றார். மேலும், ஈரானுடனான மோதல் மற்றும் பாதுகாப்புத் துறையின் தற்போதைய செயல்பாடுகளையும் தனது உரையின் போது ஒபாமா சுட்டிக்காட்டினார்.

அமெரிக்க இடைக்காலத் தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்து வரும் நிலையில், ஒபாமாவின் இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சித் தலைவர்கள் ஒருவரையொருவர் தீவிரமாக விமர்சித்து வரும் நிலையில் தேர்தல் களம் மேலும் சூட பிடித்துள்ளது.