தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ.100 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான முடிவுற்ற திட்டங்களைத் தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கும் அரசு விழாவில் பங்கேற்றார். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவின் போது, பொதுமக்கள் தரப்பில் தங்களது கோரிக்கைகள் குறித்த மனுக்களை அளிப்பதற்காகப் பலர் வருகை தந்திருந்தனர். அப்போது கூட்டத்தில் கையில் மனுவை வைத்துக்கொண்டு மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் உருக்கமாகக் கண்ணீர் விட்டு அழுத காட்சி அங்கிருந்த அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
அந்தப் பெண் அழுவதைக் கவனித்த முதலமைச்சர் விஜய், உடனே அவரிடம் நேரில் சென்று அவரது கண்ணீரைத் துடைத்து ஆறுதல் கூறினார். மேலும் அப்பெண் கொண்டு வந்திருந்த கோரிக்கை மனுவைக் கையோடு பெற்றுக்கொண்ட அவர், அதில் குறிப்பிடப்பட்டுள்ள கோரிக்கைகள் குறித்து உடனடியாகப் பரிசீலித்துத் தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். முதலமைச்சரின் இந்தச் செயல் அங்கிருந்த பொதுமக்களையும் அதிகாரிகளையும் நெகிழ வைத்ததுடன், இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மனுவைப் பெற்றுக்கொண்ட பின்னர், விழா மேடையில் இருந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளைப் பயனாளிகளுக்கு முதலமைச்சர் விஜய் முறைப்படி வழங்கினார்.
கண்ணீருடன் மனு அளித்த மாற்றுத்திறனாளி பெண்ணின் கோரிக்கை குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.