Posted in

அமெரிக்கத் தாக்குதல் அச்சுறுத்தல்: அணுசக்தி நிலையங்கள் அருகே அயோடின் மாத்திரைகளை வழங்கும் ஈரான்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானின் ரகசிய அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சுறுத்தல் வலுத்துள்ள நிலையில், ஈரான் அரசு தனது குடிமக்களுக்கு அயோடின் மாத்திரைகளை விநியோகித்து வருகிறது. அணுசக்தி கழிவுகள் மற்றும் கதிர்வீச்சுப் பாதிப்பில் இருந்து உடலைப் பாதுகாப்பதற்காக அணுமின் நிலையங்களை சுற்றியுள்ள பகுதிகளுக்கு இம்மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், கதிர்வீச்சு விபத்து ஏற்பட்டால் எவ்வாறு தப்பிப்பது என்பது குறித்த அவசரகால வழிகாட்டு நெறிமுறைகளையும் ஈரான் வெளியிட்டுள்ளது.

ஈரானின் பூஷெர் நகரில் உள்ள அணுமின் நிலையத்தைச் சுற்றியுள்ள மக்களுக்கு சுமார் 1,80,000 அயோடின் மாத்திரைகள் விநியோகிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அணுசக்தி நிலையங்களில் இருந்து 2 முதல் 3 கிலோமீட்டர் சுற்றளவில் வாழும் மக்களுக்கு இந்த மாத்திரைகள் வழங்கப்படுவதாக ஈரான் சுகாதார அமைச்சக அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார். ஈரானின் பிக்ஏக்ஸ் மலைப் பகுதியில் அமைந்த நிலத்தடி அணுசக்தி மையத்தைக் குறிவைத்து அமெரிக்கா தீவிரத் தாக்குதல் நடத்தக்கூடும் என்று வெள்ளை மாளிகை வட்டாரங்களில் ஆலோசிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது.

அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்குப் பதிலளிக்கும் வகையில் ஈரான் வெளியிட்ட வழிகாட்டுதலில், கதிர்வீச்சுப் பாதிப்பு ஏற்பட்டால் 24 மணி நேரம் வீடுகளுக்குள்ளேயே தங்கியிருக்கவும், குளிரூட்டும் சாதனங்களை (AC) அணைத்து வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. “டொனால்ட் டிரம்பை இனி நம்ப முடியாது, அவர் இந்தத் தாக்குதலை நடத்த வாய்ப்புள்ளது” என்று ஈரான் சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார். மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர்ப் பதற்றம் சர்வதேச சமூகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது ஈரான் தனது தற்காப்பு நடவடிக்கைகளை அதிகரித்து அணுசக்தி அவசரகாலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

அமெரிக்காவின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்துச் சர்வதேச விண்வெளி மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றன.