Posted in

மீண்டும் நடிக்க வரும் விஜய் – ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி

அரசு விளம்பரம் மூலம் நடிகர் விஜய் மீண்டும் கேமரா முன் தோன்ற உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்கள் இடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

 

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்த விஜய், முழுநேர அரசியலில் களமிறங்கி தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார். தான் அரசியலுக்கு வருவதற்கு முன்பாகவே எச். வினோத் இயக்கத்தில் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படம்தான் தனது கடைசி திரைப்படம் என்றும், இனி திரைப்படங்களில் நடிக்கப் போவதில்லை என்றும் அவர் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு அவரது லட்சக்கணக்கான ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருந்த நிலையில், தற்போது அவர் மீண்டும் கேமரா முன்னால் தோன்றவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

தமிழ்நாடு அரசு சார்பில் மக்கள் விழிப்புணர்விற்காகத் தயாரிக்கப்பட உள்ள சிறப்பு விளம்பரம் ஒன்றில் நடிகர் விஜய் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. முன்னணி திரைப்பட இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இந்த விளம்பரப் படத்தினை இயக்க உள்ளதாக சினிமா வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. திரைப்படங்களில் இருந்து விலகி அரசுப் பணிகளில் கவனம் செலுத்தி வந்த விஜய், பொதுநல விழிப்புணர்வு விளம்பரம் மூலம் மீண்டும் நடிக்க வருவது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

திரைப்படங்களில் இனி நடிக்கப்போவதில்லை என்ற முடிவில் உறுதியாக இருக்கும் விஜய், அரசு விளம்பரம் என்பதால் இதில் நடிக்கச் சம்மதம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவரை மீண்டும் திரையில் மற்றும் கேமரா முன்னால் காண முடியும் என்பதால் அவரது ரசிகர்கள் இந்தச் செய்தியைக் கொண்டாடி வருகின்றனர்.

இருப்பினும், இந்த விளம்பரப் படப்பிடிப்பு மற்றும் அதில் விஜய் பங்கேற்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

அரசு தரப்பில் இருந்து விரைவில் இதுகுறித்த தகவல்கள் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.