Posted in

தீபாவளி பண்டிகை வசூலில் பந்தயம் அடிச்ச டாஸ்மாக்

தீபாவளி பண்டிகையையொட்டி தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளில் 2 நாட்களில் மொத்தம் ரூ.441.38 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடும் வகையில் உள்ளூர் மக்கள் மற்றும் மதுப் பிரியர்களின் வருகையால் டாஸ்மாக் கடைகளில் விற்பனை வழக்கத்தை விட அதிகரித்தது. தீபாவளிக்கு முந்தைய நாளான நவம்பர் 7-ஆம் தேதி ரூ.234.75 கோடிக்கும், பண்டிகை நாளான நவம்பர் 8-ஆம் தேதி ரூ.206.63 கோடிக்கும் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகத் டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதன் மூலம் 2 நாட்களில் மட்டும் ஒட்டுமொத்தமாக ரூ.441.38 கோடி வசூலாகியுள்ளது.

மாநிலத்தில் உள்ள 5 மண்டலங்களில் அதிகபட்சமாகத் திருச்சி மண்டலத்தில் ரூ.98.97 கோடிக்கு மது விற்பனை பதிவாகி முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதனைத் தொடர்ந்து சென்னை மண்டலத்தில் ரூ.95.85 கோடியும், மதுரை மண்டலத்தில் ரூ.88.38 கோடியும் வசூலாகியுள்ளது. மேலும் சேலம் மண்டலத்தில் ரூ.87.52 கோடியும், கோவை மண்டலத்தில் ரூ.70.66 கோடிக்கும் மது விற்பனை நடைபெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீபாவளிக்கு அடுத்த நாளான திங்கட்கிழமையும் அரசு விடுமுறை தினமாக உள்ளதால், மதுபான விற்பனை தொடர்ந்து அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விடுமுறை தின விற்பனையையும் சேர்த்தால் இந்தத் தீபாவளிக் காலத்தின் மொத்த மது விற்பனை சுமார் ரூ.633.38 கோடியை எட்டும் என டாஸ்மாக் நிர்வாகம் எதிர்பார்க்கிறது.

தற்போது டாஸ்மாக் கடைகளில் பண்டிகைக் காலக் கூட்ட நெரிசலைச் சமாளிக்கவும் விற்பனையை முறைப்படுத்தவும் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.