அமெரிக்கத் தலைநகரான வாஷிங்டனில் உள்ள உயர்மட்ட அதிகாரிகளைக் குறிவைத்து ஈரான் ‘டர்ட்டி பாம்’ (dirty bomb) எனப்படும் கதிர்வீச்சு குண்டு அல்லது ரசாயனத் தாக்குதலுக்குத் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரித்துள்ளது. வெளியிட்டுள்ள இந்தத் தகவலைத் தொடர்ந்து, நிலைமையை மிகச் சீரியஸாகக் கவனித்து வருவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரானுடன் நிலவி வரும் மோதல்களுக்கு மத்தியில், தங்களது விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்ளும் நோக்கில் இந்த ஆரம்பகட்டத் திட்டங்களை ஈரான் பரிசீலித்து வருவதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும், அமெரிக்காவிற்குள் ஏற்கனவே கதிர்வீச்சுப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்த உறுதியான தகவல்கள் எதும் முழுமையாக உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்த விவகாரம் குறித்துப் பேசிய அதிபர் டிரம்ப், இது போன்ற தாக்குதல்கள் நடத்தப்பட்டால் ஈரான் இதுவரை எந்த நாடும் சந்திக்காத கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளார். மறுபுறம், அமெரிக்க ஊடகங்களில் வெளியாகி இருக்கும் இந்தத் தகவல்கள் முற்றிலும் ஆதாரமற்றவை என்றும், அவதூறுகளைப் பரப்புவதற்கான பிரச்சாரம் என்றும் ஈரான் வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
தற்போதைய சூழலில் அமெரிக்க உளவுத்துறையும் பாதுகாப்பு அதிகாரிகளும் இந்தத் தகவல்களைத் தீவிரமாக ஆராய்ந்து கண்காணித்து வருகின்றனர். மத்திய கிழக்கு விவகாரங்களில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலையில், இந்த உளவுத்துறை எச்சரிக்கை சர்வதேச அரசியல் அரங்கில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.