அவசர அவசரமாக ஃபிளைட் பிடித்து லண்டனுக்கு லேண்ட் ஆனார் விக்னேஷ் சிவன். லண்டனில் உள்ள ‘கனரி-வாஃர்ப்’ (Canary Wharf) பகுதியில் இருக்கும் மஞ்சள் ரெஸ்டாரண்டில், லைக்கா ஓனரைச் சந்தித்து, “எனக்கு இந்த சான்ஸ் கண்டிப்பா வேணும். நான் கதையை அஜித்திடம் சொல்லிவிட்டேன், ஆனா அவருக்குப் பிடிக்கலங்குறாரு” என ஒரு மாதிரி பீல் பண்ணிப் பேசியிருக்கார். ஆனா, லைக்கா முதலாளி, கொஞ்சம் கூட விக்கி பேச்சை காதில் வாங்கவில்லை. அங்கேயே போனை எடுத்து நடிகர் அஜித்தைக் கூப்பிட்டு இருக்கார்.
அடுத்த ஒரு மணி நேரத்தில், அஜித்தும் ஸ்பாட்டுக்கு வந்துட்டார். அந்த சமயம் அவரும் லண்டனில் தான் தங்கியிருந்தாராம். “கதை எனக்கு செட் ஆகாதுப்பா” என்று கட்டையாகச் சொல்லி, இருவரும் சேர்ந்து விக்னேஷ் சிவனை அனுப்பிவிட்டனர். இதனைத் தொடர்ந்து லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவிடமிருந்து கால் போயிருக்கிறது, ஆனால் லைக்கா முதலாளி அதை அட்டெண்ட் செய்யவே இல்லை. என்ன பேசப்போறாங்கன்னு அவருக்கு ஏற்கனவே ஒரு ஐடியா இருந்திருக்குமே!
இந்த மேட்டரை நேரில் பார்த்த லண்டன் வாழ் இலங்கை நண்பர் ஒருவர் சொன்ன தகவல்தான் இது. அதன் பின்னர் மகிழ் திருமேனியை வைத்து ‘விடாமுயற்சி’ என்ற படம் உருவானது. இதில் ஹைலைட் என்னவென்றால், அஜித்திற்குப் புதுக்கதைகள் அலர்ஜியாம்; வெளியாகி ஹிட்டான ஏதாவது ஒரு ஆங்கிலப் படக் கதையைத் தான் அவர் விரும்புவாராம். இதனால்தான் ஒரிஜினல் கதையோடு வந்த விக்கியை கழட்டிவிட்டு, ‘சுட்ட’ கதையோடு வந்த மகிழ் திருமேனியை லைக்கா நிறுவனம் லாக் செய்தது.
அதன்பின் நடந்த கூத்து தான் ஊருக்கே தெரியுமே! இதுல இன்னொரு சுவாரஸ்யம் என்னன்னா, அஜித் தன் சம்பளத்தை விஜய்க்கு நிகராக 200 கோடியாக உயர்த்த அடம் பிடித்து வாங்கினாராம். ஆனா பாருங்க, இப்போ கையில பட வாய்ப்பு எதுவும் இல்லாம, வெறும் கார் ரேஸ் பக்கம் ஒதுங்கி காலம் தள்ளிக்கிட்டு இருக்காரு ‘AK’.
சரி விஷயத்துக்கு வருவோம், இப்படி பல அவமானங்களைச் சந்தித்த விக்னேஷ் சிவன், இப்போ ‘ஃபீனிக்ஸ் பறவை’ மாதிரி மீண்டு வந்து இயக்கியுள்ள படம்தான் “LIK”. இதில் யூத் சூப்பர் ஸ்டார் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளார். ‘டிராகன்’, ‘லவ் டுடே’ ஹிட்டுக்குப் பிறகு பிரதீப் இதில் கலக்கியிருக்காராம். நேற்று (ஏப்ரல் 7) சென்னையில் நடந்த ப்ரீ-ரிலீஸ் ஈவென்ட்டில் விக்னேஷ் சிவன் ரொம்பவே உருக்கமாகவும், தன்னடக்கத்துடனும் பேசிய பேச்சு இப்போ சோஷியல் மீடியாவில வைரல். வரும் ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகப்போகும் இந்தப் படம், முதல் சில நாட்களிலேயே 100 கோடியை அள்ளும்னு கோடம்பாக்கத்துல பலரும் ‘பெட்’ கட்டுறாங்க!