Posted in

ஆஹா கல்யாணம் சீரியல் நடிகை அக்ஷயாவின் ஆ…ஹா போட்டோஸ் இதோ…

📅 வெளியானது: April 13, 2026

சின்னத்திரை உலகில் சன் டிவி மற்றும் ஜீ தமிழ் எனப் பல சேனல்கள் இருந்தாலும், விஜய் தொலைக்காட்சி சீரியல்களில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்குத்தான் மக்கள் மத்தியில் எப்போதும் ஒரு தனி மவுசு இருக்கிறது. பிக் பாஸ் முதல் குக் வித் கோமாளி வரை பல்வேறு வாய்ப்புகள் அவர்களைத் தேடி வருவதால், ஒரே ஒரு சீரியலில் நடித்தாலும் புகழின் உச்சிக்குச் சென்றுவிடுகின்றனர். அந்த வரிசையில், விஜய் டிவியில் ரசிகர்களின் பேராதரவைப் பெற்ற ‘ஆஹா கல்யாணம்’ சீரியலில் நாயகி மஹா-வாக நடித்து பட்டிதொட்டியெங்கும் பிரபலமானவர் தான் நடிகை அக்ஷயா.

ஆஹா கல்யாணம் தொடரில் குடும்பப்பாங்கான பெண்ணாக, பொறுப்பான மகளாகவும் மனைவியாகவும் நடித்து வந்த அக்ஷயா, அந்த பிராஜக்ட் முடிந்த பிறகு மற்ற நடிகைகளைப் போல அடுத்தடுத்த சீரியல்களில் கமிட்டாகாமல் சற்றே மௌனம் காத்து வந்தார். ஆனால், திரையில் காணவில்லை என்றாலும் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் இவர், தொடர்ந்து விதவிதமான போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார். பொதுவாக சீரியல் நடிகைகள் அடுத்த வாய்ப்பிற்காகத் தங்களை மாடர்னாகக் காட்டிக்கொள்வது வழக்கம், அந்தப் பாதையையே தற்போது அக்ஷயாவும் தேர்ந்தெடுத்துள்ளார்.

தற்போது அக்ஷயா வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகின்றன. இதுவரை சேலையில் பார்த்த மஹாவா இது? என ரசிகர்கள் கேட்கும் வகையில், உடல்வாகு தெரியும் படி கருப்பு நிற உடையில் செம ஸ்டைலிஷ் லுக்கில் அவர் போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலானதை அடுத்து, “சீக்கிரமே இவரை வெள்ளித்திரையில் அல்லது ஒரு பெரிய வெப் சீரிஸில் பார்க்கலாம் போலிருக்கிறதே” என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.