Posted in

என்றும் இளமை மாறமல் மஞ்சல் புடவையில் ஜொலிக்கும் ஜோதிகா !

📅 வெளியானது: April 14, 2026

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நடிகை ஜோதிகா வெளியிட்டுள்ள அழகிய புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக பரவி வருகின்றன. காஞ்சிபுரம் பட்டுப்புடவையில் பாரம்பரியமான தோற்றத்தில் ஜோதிகா நடத்தியுள்ள இந்த போட்டோஷூட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. கடந்த சில காலமாக பாலிவுட் பக்கம் கவனம் செலுத்தி வந்த ஜோதிகா, தற்போது மீண்டும் ஒரு தமிழ் பெண்ணாக காட்சியளிப்பது அவர் மீண்டும் கோலிவுட்டுக்கு வரப்போகிறாரா என்கிற எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

அதே நேரத்தில், நடிகர் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படம் அடுத்த மாதம் மே 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக தயாராக உள்ளது. சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இப்படத்தின் மூன்றாவது பாடல் இன்று வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. சூர்யாவும் ஜோதிகாவும் தற்போது மும்பையிலிருந்து சென்னைக்கு குடிபெயர்ந்துள்ளதால், இருவரும் தமிழ் படங்களில் அதிக கவனம் செலுத்தப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக, நடிகை ராதிகாவுக்கு ‘தாய் கிழவி’ திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது போல, ஜோதிகாவுக்கும் பெண்களை முன்னிலைப்படுத்தும் ஒரு வலிமையான கதையை இயக்குநர்கள் தயார் செய்து வருவதாக கூறப்படுகிறது. பாலிவுட் வெப் தொடர்களில் நடித்த ஜோதிகா, மீண்டும் தனது திறமையான நடிப்பை தமிழ் சினிமாவில் வெளிப்படுத்த வேண்டும் என்பதே ரசிகர்களின் ஆசையாக உள்ளது. இதற்காக அவர் சென்னை வந்துள்ள நிலையில், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.