கடந்த ஆண்டு ‘ஆபரேஷன் நைட் ஹேமர்’ (Operation Midnight Hammer) மூலம் ஈரானின் அணுசக்தி மையங்களை தரைமட்டமாக்கி, யுரேனியத்தை அடியோடு ஒழித்துக்கட்டுவோம் என்று சீறினார் டொனால்ட் டிரம்ப். ஆனால், நிஜத்தில் என்ன நடந்தது? அமெரிக்காவின் அதிநவீன பி-2 (B2) பாம்பர் விமானங்கள் போட்ட குண்டுகளுக்குப் பிறகும், ஈரான் 2,000 கிலோ யுரேனியத்தைப் பூமிக்கு அடியில் பத்திரமாக வைத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்போது ‘எபிக் பியூரி’ (Epic Fury) போரில் யுரேனியத்தை அழிக்க முடியாததால், வேறு வழியின்றி $20 பில்லியன் டாலர் (சுமார் 16 லட்சம் கோடி ரூபாய்) பணத்தைக் கொடுத்து அந்த யுரேனியத்தை விலைக்கு வாங்க டிரம்ப் அரசு பேரம் பேசி வருவதுதான் தற்போதைய சர்வதேச நகைச்சுவை!
இந்த விநோத பேரத்தைப் பற்றி தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், “நாங்கள் ஈரானிடம் பணம் எதையும் கொடுக்கப் போவதில்லை. எங்கள் பி-2 பாம்பர்கள் உருவாக்கிய ‘அணுசக்தி தூசியை’ (Nuclear Dust) மட்டும் அமெரிக்கா திரும்பப் பெறும்” என்று சப்பைக்கட்டு கட்டி வருகிறார். அழிப்பதாகச் சொல்லி போரைத் தொடங்கிவிட்டு, இப்போது ‘யுரேனியம் தூசியை’ விலைக்கு வாங்கப் பார்ப்பது அமெரிக்காவின் பலவீனத்தையே காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கிண்டலடிக்கின்றனர். ஈரானோ, யுரேனியத்தை அமெரிக்காவிற்கு அனுப்ப முடியாது, வேண்டுமானால் அதைத் தூளாக்கி (Down-blended) இங்கே வைத்துக் கொள்கிறோம் என அமெரிக்காவுக்கு ‘ஆப்பு’ வைத்துள்ளது.
வரும் ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நடக்கவுள்ள இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையில், அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் (JD Vance) தலைமையிலான குழு ஈரானிடம் மண்டியிடப் போகிறதா அல்லது மீண்டும் மோதப் போகிறதா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி. ஏற்கனவே ஒரு வாரம் முன்பு பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், இப்போது 20 பில்லியன் டாலர் ஆசையைக் காட்டி ஈரானை வளைக்க டிரம்ப் முயற்சி செய்கிறார். யுரேனியத்தை அழிக்கப் புறப்பட்ட டிரம்ப், இப்போது அதை ‘தூசியாக’ வாங்கத் துடிப்பது, “கடைசியில் காசை கொடுத்துப் பணிய வைக்க வேண்டியதாயிற்றே” என்ற அவப்பெயரை அமெரிக்காவிற்கு ஏற்படுத்தியுள்ளது.
மொத்தத்தில், ஈரானின் அணுசக்தி கனவைத் தகர்க்கப் போன அமெரிக்கா, இப்போது 20 பில்லியன் டாலரை இழந்துவிட்டு ‘வெறும் தூசியுடன்’ வீடு திரும்பப் போகிறது. “பணம் கைமாறாது” என்று டிரம்ப் மேடையில் சொன்னாலும், திரைமறைவில் 20 பில்லியன் டாலர் பேரம் பேசப்படுவது அம்பலமாகியுள்ளது. “யுரேனியத்தை அழிக்க வக்கில்லாமல், காசு கொடுத்து வாங்கப் போகிறார்களா?” என உலக நாடுகள் சிரிக்கும் நிலைக்கு அமெரிக்கா தள்ளப்பட்டுள்ளது. இந்த ‘தூசி’ விவகாரம் டிரம்பின் அரசியல் வாழ்க்கையில் ஒரு பெரிய காமெடியாகவே பார்க்கப்படுகிறது!