தற்போது (இந்தச் செய்தி பதிவாகியுள்ள நேரத்தில்) சென்னை பனையூரில் உள்ள TVK அலுவலகத்திற்கு 5 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் என அனைவரும் சென்றுள்ளார்கள். இன்னும் சில நிமிடங்களில் விஜய்க்குத் தாங்கள் ஆதரவு கொடுப்பதாக அந்த 5 எம்.எல்.ஏக்களும் கடிதத்தைக் கொடுக்க உள்ளார்கள். எனவே விஜய் பக்கம் தற்போது 113 பேர் இருக்கிறார்கள். மேலும் 5 எம்.எல்.ஏக்களே தேவை.
இது இவ்வாறு இருக்க, அதிமுகவில் உள்ள பல எம்.எல்.ஏக்கள் TVK கட்சிப் பக்கம் சாய உள்ளதாகக் கூறப்படுகிறது. இவர்கள் கட்சித் தாவலில் ஈடுபடாமல் அதிமுகவிலேயே இருந்தவண்ணம் விஜய்க்கு ஆதரவைக் கொடுக்க உள்ளார்கள். இதனைச் செங்கோட்டையன் செய்து வருகிறார். எனவே அதிமுகவிலிருந்து சுமார் 19 எம்.எல்.ஏக்கள் இவ்வாறு விஜய்க்கு ஆதரவு கொடுக்க முன்வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இன்னும் சற்று நேரத்தில் இந்தக் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுடன் விஜய் புறப்பட்டு ஆளுநர் மாளிகைக்குச் செல்ல உள்ளார்கள்.