Posted in

டெல்லியில் விஜய்க்கு 3 அடுக்கு பாதுகாப்பு: டெல்லி பொலிசார் பெரும் ஏற்பாடுகள் !

தற்போது விமான நிலையத்தில் இருக்கும் விஜய் அவர்கள், இன்னும் சிறிது நேரத்தில் தனி விமானம் மூலம் டெல்லி புறப்படுகிறார். அவர் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் 2 நாட்கள் தங்க உள்ள நிலையில், டெல்லி உளவுத்துறை விஜய்க்கு 3 அடுக்கு பாதுகாப்பைக் கொடுத்துள்ளது பெரும் பரபரப்பான விஷயமாகப் பார்க்கப்படுகிறது. விஜய்யின் தனி விமானம் டெல்லி செல்லும் நிலையில், டெல்லி விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பிரதமர் மோடி அவர்களையும், உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனையும் விஜய் சந்திக்கிறார். இருப்பினும் நிதி அமைச்சரோடு விஜய் அவர்கள் சற்று அதிக நேரம் சந்திப்பில் ஈடுபடுவார் என்று தெரியவருகிறது. காரணம், மத்திய நிதி அமைச்சர் தமிழகத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பான பல கோரிக்கைகளைக் கையில் எடுத்துச் செல்கிறார் விஜய். தமிழ்நாட்டை எப்படி முன்னேற்ற வேண்டும் என்ற முக்கிய ஆவணங்களை அவர் எடுத்துச் செல்வதாகத் தகவல் கிடைத்துள்ளது.

விஜய் 2 நாட்கள் டெல்லியில் தங்கியிருக்கும் நிலையில், அவர் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரையும் சந்திப்பார் என்றும், இதன் மூலம் வலுவான ஒரு கூட்டணியை விஜய் உருவாக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. முதல் தடவையாகத் தனது சொந்த பணத்தைச் செலவு செய்து டெல்லி பயணிக்கும் முதல்வர் என்ற புகழைப் பெறுகிறார் விஜய். அரசுப் பணத்தைப் பயன்படுத்தாமல், சொந்த செலவில் தனி விமானத்தை விஜய் புக் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று 3 முக்கிய மத்திய தலைவர்களைச் சந்திக்கும் விஜய், நாளை காலை காங்கிரஸ் கட்சித் தலைவர்களைச் சந்தித்துவிட்டு மீண்டும் டெல்லியில் இருந்து தமிழ்நாடு திரும்ப உள்ளார். விஜய்யுடன் 9 முக்கிய தவெக தலைவர்கள் செல்ல உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விஜய் கைகளில் 16 கோரிக்கைகள் கொண்ட மனு ஒன்று உள்ளதாகவும், இதனை அவர் நிர்மலா சீதாராமனுடன் விரிவாக விவாதிப்பார் என்றும் கூறப்படுகிறது.