Posted in

இத்தாலி ரோம் நகரில் ரொமான்ஸ் செய்யும் நயன் தாரா – வைரல் புகைப்படங்கள் !

தமிழ் திரையுலகில் திருமணமாகி குழந்தைகள் பிறந்துவிட்டால் நடிகைகளின் மார்க்கெட் சரிந்துவிடும் என்ற எழுதப்படாத விதியை உடைத்தெறிந்தவர் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா. இயக்குனர் விக்னேஷ் சிவனைத் திருமணம் செய்து, இரட்டை குழந்தைகளுக்குத் தாயான பிறகும் தனது சினிமா மார்க்கெட்டையும் மதிப்பையும் துளியும் குறைக்காமல் டாப் கியரில் பயணித்து வருகிறார். ஒருபக்கம் பாசமிகு தாயாகவும், மறுபக்கம் கோலிவுட் முதல் பாலிவுட் வரை இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் முன்னணி கதாநாயகியாகவும் வலம் வரும் நயன்தாரா, வயது என்பது வெறும் எண்தான் என்பதைத் தனது கடின உழைப்பால் நிரூபித்துக் காட்டியுள்ளார்.

எவ்வளவு பிஸியான படப்பிடிப்புகள் இருந்தாலும், தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் தரமான நேரத்தைச் செலவிடுவதை நயன்தாரா என்றுமே தவறியதில்லை. அந்த வகையில், தற்போது தனது ஒட்டுமொத்த குடும்பத்துடனும் இத்தாலி நாட்டிற்கு இன்பச்சுற்றுலா சென்றுள்ளார் நயன்தாரா. அங்கு கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் தனது இரட்டைக் குழந்தைகளுடன் நயன்தாரா எடுத்துக்கொண்ட க்யூட்டான, ரொமாண்டிக்கான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி, ஒட்டுமொத்த சமூக வலைத்தளங்களையும் ஆக்கிரமித்து செம வைரலாகி வருகின்றன.

தற்போது பாலிவுட் மெகா ஸ்டார் சல்மான் கானுக்கு ஜோடியாக, பிரபல இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் ‘SVC 63’ திரைப்படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார். இந்த பிரம்மாண்ட திரைப்படம் வரும் 2027-ஆம் ஆண்டு ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளது. இதுமட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் விஷ்ணு எடவன் இயக்கத்தில், இளம் நடிகர் கவின் நடிக்கும் ‘ஹாய்’ (HI) திரைப்படத்திலும் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விடுமுறை முடிந்து திரும்பியதும் நயன்தாரா அடுத்தடுத்த படப்பிடிப்புகளில் அதிரடியாகக் குதிக்கவுள்ளார்.